உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் ஆசியை பெற்ற பா.ஜ., அரசு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

மக்களின் ஆசியை பெற்ற பா.ஜ., அரசு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு செய்த பணிகளுக்காக மக்களின் நம்பிக்கை மற்றும் ஆசியை பெற்றுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து டில்லியில் நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சரியான நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் திசையில் பொருளாதாரத்தை கையாண்டுள்ளோம். அக்கறையுடன் கூடிய அரசாக உள்ளது. நிதி பற்றாக்குறையானது 5.9 சதவீதத்தில் இருந்து 5.8 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024- 25 பட்ஜெட்டில் இதனை 5.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நடுத்தர மக்களுக்காக குடியிருப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. சரியான கொள்கை, நோக்கம், கொள்கை முடிவுகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்துள்ளோம். அக்கறை, நம்பிக்கை உறுதி உள்ள நிர்வாகமாக பா.ஜ., அரசு செயல்படுகிறது. மக்கள் நன்றாக சம்பாதிக்கவும், உயர்ந்த நோக்குடன் எதிர்காலத்தை கட்டமைக்கவும் அரசு உதவுகிறது.முந்தைய அரசின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஜிடிபியில் செய்த சிறந்த சாதனைகளுக்காக, மக்களின் நம்பிக்கை மற்றும் ஆசியை மத்திய அரசு பெற்றுள்ளது. எங்களைப் பொறுத்தவரை ஜிடிபி என்றால் நிர்வாகம், வளர்ச்சி மற்றும் திறமை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

விவசாயி
பிப் 02, 2024 08:11

சரிங்க மேடம், அப்போ நீங்கள் தைரியமா வரும் நாடாளுமன்ற தேர்தலில், போட்டியிட்டு ஜெயித்து மக்கள் ஆதரவோடு நாடாளுமன்றம் போகலாமே?


Ramesh Sargam
பிப் 02, 2024 00:55

மக்களின் ஆசி என்றைக்கும் உண்டு. ஆனால் ஒரு சில தேச துரோகிகளின் ஆசி இல்லை. அவர்களை விட்டுத்தள்ளுங்கள் மேடம்.


Kumar
பிப் 01, 2024 23:45

தேர்தலில் நின்று பாருங்கள் தெரியும், இந்த தடவையும் தோல்விதான் உங்களுக்கு..


இராம தாசன்
பிப் 01, 2024 22:45

தமிழக மக்கள் தவிர என்று சொல்லி இருக்க வேண்டும் - தமிழன் என்று போதையிலிருந்து வெளி வருகிறானோ அன்று தான் நல்ல காலம் பிறக்கும். திராவிட காட்சிகள் இதை நன்கு அறியும் - அதனால் தான் தமிழர்களை எப்போதும் போதையில் வைத்து உள்ளார்கள்


g.s,rajan
பிப் 01, 2024 20:11

குறிப்பா தமிழக மக்களின் ஆசியைப் பெற்ற பா.ஜ. க அரசுன்னு ரொம்ப தைரியமாச் சொல்லுங்க....


g.s,rajan
பிப் 01, 2024 20:08

இந்திய மக்கள் கண்டிப்பாகச் சொல்ல மாட்டார்கள் அதனால் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்கள் சொல்லுவது போல் சொல்கிறார்.....


Sheshathri Velayutham
பிப் 01, 2024 18:35

ஆமாம் மேடம் ஜிஎஸ்டி வசூல் 3 மடங்கு உயர்வு என்று பட்ஜெட்டில் சொல்லி உள்ளீர்கள் இதற்கு கண்டிப்பாக மக்கள் ஆசி உங்களுக்கு உண்டு.


Indian
பிப் 01, 2024 18:07

பாஜக அரசு என்று சொல்லுங்கள்


Narayanan Muthu
பிப் 01, 2024 17:54

மக்களின் ஆசி அல்ல வாக்கு எந்திரத்தின் ஆசி என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.


முருகன்
பிப் 01, 2024 17:23

இதை மக்கள் சொல்ல வேண்டும்.. அப்போம் நன்றாக இருக்கும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை