உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யாவின் தற்போதைய அதிபராக விளாடிமிர் புடின், 71, உள்ளார். இவரது பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், அதிபர் தேர்தல் கடந்த 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு நடந்தது. இதில், தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் 87 சதவீத ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மீண்டும் அதிபராக பதவியேற்கிறார்.விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‛‛ எக்ஸ்'' வலைதளத்தில் மோடி பதிவேற்றியது,ரஷ்ய அதிபராக மீண்டும் வெற்றி பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றியால் வரும் காலங்களில் இரு நாடுகளிடையே பரஸ்பரம் , ஒத்துழைப்பு, நட்புறவு மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட எதிர்பார்க்கிறேன். இவ்வாறு மோடி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

மாலா
மார் 19, 2024 08:10

அப்கே பார் புட்டின் சர்க்கார்.


Palanisamy Sekar
மார் 18, 2024 20:54

இருபெரும் தலைவர்கள்..எதிர்கால உலகத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் காக்கும் பொறுப்பில் உள்ளவர்கள். நட்பில் இவர்களுக்கு ஈடு இணையே கிடையாது.நமது பொருளாதார வளர்ச்சிக்கு ரஷ்யாவின் பங்கை மறக்க முடியாது.எல்லையில்லா அன்பில் இருவரின் நட்பு தொடரும்..தொடர்ந்துகொண்டே இருக்கும். புடினின் வெற்றியானது இந்தியாவின் வெற்றியை போன்றது.


sundarsvpr
மார் 18, 2024 19:40

உலகில் திறமையுள்ள தலைவர்களில் அதிகம் விம்ர்சனத்திற்கு உள்ளானவர். இதுதான் இவருக்கு பயன். வாழ்த்துக்கள்


RAMAKRISHNAN NATESAN
மார் 18, 2024 19:22

எங்க ஊர்ல என்னதான் ஆப்பீசர்ஸ் அரசை நடத்தினாலும் அமைச்சரவை ன்னு ஒரு காமெடி பண்ணுவோம் ..... உங்க ஊர்லல்லாம் அப்படிக் கிடையாதா ????


vbs manian
மார் 18, 2024 19:14

ரேஸில் ஓடியது ஒரே ஒரு குதிரை.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி