உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, 152 பேரின் நிலை தெரியவில்லை. 11வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. பலியானவர்களில் சிலரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்ததால், அவர்களின் டி.என்.ஏ.,வை வைத்து அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகிறது.நிலச்சரிவில் சிக்கி இவ்வளவு உயிர்களை இழந்த சோகத்திற்கு இடையே கேரளாவில் செப்., 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய அம்மாநில சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரள அரசு தரப்பில், வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக, நாளை (ஆகஸ்ட் 10ம் தேதி) நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியை கேரள அரசு ரத்து செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Natarajan Ramanathan
ஆக 10, 2024 03:24

ஒரு சிறு பகுதியான வயநாட்டில் மட்டுமே பாதிப்பு. எனவே வயநாடு தவிர மற்ற பகுதிகளில் ஓணம் கொண்டாட என்ன பிரச்சனை?


Ramesh Sargam
ஆக 09, 2024 23:08

மாநில அரசு சோகத்தை போக்குவதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும்.


sridhar
ஆக 09, 2024 20:40

சோகம் இருந்தால் உனக்கு சோறு எதுக்கு , பத்து நாள் சாப்பிடாதே .


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 20:25

இந்தியன் என்கிற பெயர் கொடுத்தது அரபுத் தந்தையா ?


M Ramachandran
ஆக 09, 2024 20:05

ஓணம் வேண்டாம் ஆனால் பணம் பண்ண திருட்டுதனம் மட்டும் நடத்தலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 20:01

அரசு சார்பிலான நிகழ்ச்சிகளுக்குத் தடை இருக்கலாம் ..... தனி மனிதர்கள் கொண்டாடுவதைத் தடுக்க முடியாது .....


இராம தாசன்
ஆக 09, 2024 18:54

இதோ வந்துட்டார் இந்துக்களின் பண்டிகைகளை தடுக்க ஏதாவது ஒரு காரணம் வேண்டும். பண்டிகைகள் சோகத்தை மறந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க ஏற்படுத்தப்பட்டவை - அதை தவிர்க்க சொல்வது அபத்தம்


chennai sivakumar
ஆக 09, 2024 18:25

அப்போ ஓணம் பம்பர் கோவிந்தா கோவிந்தா


nagendhiran
ஆக 09, 2024 18:25

மாற்று மத நிகழ்ச்சியில்? இனம் என பிறிந்தது போதுமௌ? மதம் என்று பிரிந்தது போதும்னு சொல்லுவானுங்க?


ram
ஆக 09, 2024 18:23

இந்த ஆளு ஒரு அமைதி மார்க்கம் ஆளு


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 19:45

இவனுக்கு ஒரு மார்க்கமும் கிடையாது ......... மாப்பிள்ளையின் மார்க்கம் அது ..........


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை