உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குவாரி மணல் விற்பனை ஊழலை ஈ.டி., விசாரிப்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

குவாரி மணல் விற்பனை ஊழலை ஈ.டி., விசாரிப்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்யப்படுவதாகவும், அதில் கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது.இதை தொடர்ந்து, தமிழகத்தின் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தமிழகத்தின் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் 10 கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து அரசு அதிகாரிகள் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், கரூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது; அதே நேரம் விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதி அளித்தது.இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதி பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ''தமிழகத்தின் மணல் குவாரி தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை,'' என்றார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:இந்த விவகாரத்தில் மாநில அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? எந்த சட்டத்தின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது இல்லையா?அமலாக்கத்துறை சம்மன் அனுப்புவதில் மாநில அரசுக்கு என்ன பிரச்னை? அதில் அவர்களுக்கு என்ன பங்கு?இந்த கேள்விக்கெல்லாம் எங்களுக்கு விடை அளியுங்கள். பூர்வாங்க விசாரணையை நிறுத்தி வைப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். ஆனால், விரிவான விளக்கம் தேவை.இவ்வாறு நீதிபதிகள் சரமாரியாக கேட்டனர்.தமிழக அரசு தரப்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, ''அமலாக்கத்துறை தங்கள் வரம்பு மீறி செயல்படும்போது, அதற்கு கலெக்டர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. ரிட் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்படும்,'' என வாதிட்டார்.விசாரணை திங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

spr
பிப் 24, 2024 23:47

அமுலாக்கத்துறை இத்தனை ரெயிடுகள் நடத்தியும் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை இதனால் அறியப்படுவது யாதெனில் ஒன்று மோடி அரசுக்கு அமுலாக்கத்துறையின் மீதுள்ள ஆளுமை குறைந்து போய்விட்டது அல்லது மோடியும் இதில் தொடர்பு உள்ளவர் என்று ஐயம் உண்டாகிறது தன கட்சி உறுப்பினரை காப்பாற்ற பாஜக முயன்றால் அது இயல்பு ஆனால் எதிர்க்கட்சிகளைக் கூடவா தண்டிக்க முடியவில்லை?


Sridhar
பிப் 24, 2024 17:47

கோர்ட்டு நீதிபதிகள் கொஞ்சம் நியாயமாக கேட்கவேண்டிய கேள்விகளை நேரிடையாக கேட்டுருக்கிறார்கள். தமிழநாடு மாநில அரசுக்கு இந்த விசாரணையில் என்ன பிரச்சனை, அவர்கள் ஏன் இதை எதிர்க்கவேண்டும் என்ற கேள்வி திராவிடியா அரசுக்கு மிக ஆழமான குட்டு. ஆனாலும் தேசத்தை உலுக்கும் கொள்ளைகள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் கோர்ட்டு காண்பிக்கும் "அவசரம்" மய் சிலிர்க்கவைக்கிறது. நவெம்பரில் ஹை கோர்ட்டால் நிறுத்திவைக்கப்பட்ட விசாரணை பிப்ரவரியில் எடுத்துக்கொள்ளப்பட்டு இன்னும் முடிவாகாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது அரசுக்கு குறைந்தபட்ச இழப்பே 5000 கோடி என கணக்கிட்டிருக்கிறார்கள். உண்மையில் 50000 கோடியிலிருந்து ஒரு லட்சம் கோடி வரை சுரண்டப்பட்டிருக்கிறது என்று பல தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலைமையில் மளமளவென்று வேலையில் இறங்காமல் இவர்கள் வேற எந்த வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்? இந்த செய்திதான் எல்லா ஊடகங்களிலேயும் இன்று தலைப்பு செய்தியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் யாருமே இதை பற்றி பேசக்காணோம் பாஜக ஆட்கள் உட்பட


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை