உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் சார்பில் நான் ஏன் போட்டியிடக் கூடாது?

காங்கிரஸ் சார்பில் நான் ஏன் போட்டியிடக் கூடாது?

குடகு: “லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் நான் ஏன் போட்டியிட கூடாது?” என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கேள்வி எழுப்பினார்.குடகு, மடிகேரியில் நேற்று அவர் கூறியதாவது:நான் ஒருவன் மட்டுமே, கட்சி தாவவில்லை. தற்போதைய முதல்வர் சித்தராமையா, பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா உட்பட, பல அரசியல்வாதிகள் கட்சி தாவியவர்கள். ஆனால் நான், யாரிடமும், எதையும் மூடி மறைக்கவில்லை. நான் செய்துள்ள வளர்ச்சி பணிகள், அனைவருக்கும் தெரியும். என் திறனை அடையாளம் கண்டு, சீட் கொடுத்தால் போட்டியிட தயார். காங்கிரஸ் சார்பில் நான் ஏன் போட்டியிட கூடாது.நாட்டில் தற்போது, பகைமை பாராட்டும் அரசியல் நடக்கிறது. எதிர்க்கட்சியினரை விரோதிகளை கருதி, அமலாக்கத்துறை மூலமாக பழி வாங்குகின்றனர். இது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. தென் மாநிலங்களின் மக்கள் பணம், வட மாநிலங்களின் மக்களுக்கு செல்கிறது. ஸ்ரீராமனை ஒரு கட்சியை சார்ந்தவராக காண்பிப்பது சரியல்ல.நாட்டின் முதல் பிரதமர் நேருவை பற்றி, இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது தவறு. நேரு பிரதமரானபோது, நாட்டில் உணவு தானியங்கள் தட்டுப்பாடு இருந்தது. அப்போது அணைகள் கட்டி, உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரிக்கும்படி செய்ததை, மறக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை