உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா : சி.பி.ஐ, வழக்கில் இன்று விசாரணை

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா : சி.பி.ஐ, வழக்கில் இன்று விசாரணை

புதுடில்லி: மதுபான கொள்கை மோசடி வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தனர். கைதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி , பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.இந்நிலையில், சி.பி.ஐ., வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
ஜூலை 05, 2024 12:31

நிச்சயம் மீன் கிடைய்க்கும்


Kasimani Baskaran
ஜூலை 05, 2024 05:32

நேரடியாக ஐநாவில் கூட மனுக்கொடுக்கலாம்.. ஆனால் அந்த ஜாமீன் கிடைக்க வாய்ப்பு குறைவு.


ram
ஜூலை 05, 2024 03:59

நீயெல்லாம் நேர்மையப்பத்தி பேசுரே வெட்கமே இல்லாமல்.. நீ கட்சி நடத்துறதே வெட்கக் கேடு..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை