உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் மன்னிப்பு கேட்பாரா?: பா.ஜ., கேள்வி

நீட் தேர்வில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராகுல் மன்னிப்பு கேட்பாரா?: பா.ஜ., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ' நீட் தேர்வில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு, ராகுல் மன்னிப்பு கேட்பாரா?' என பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qkrs9ifm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் கண்ணியத்தை ராகுல் மீறி வருகிறார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, அரசு தேர்வில் நம்பிக்கையின்மையை ராகுல் தூண்டினார்.

மன்னிப்பு

நீட் மறு தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்பாரா?. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது வினாத்தாள் கசிவுகள் அதிகமாக நடந்தன. தற்போது வினாத்தாள் கசிவை தடுக்க பா.ஜ., அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Prem Kumar.K
ஜூலை 25, 2024 07:48

படிக்காதவன் போல் பேசுகிறாய். தவறு நடந்து விட்டது. உங்களை நியாயப்படுத்துவதில் அர்த்தமில்லை..


வெங்கட்
ஜூலை 25, 2024 03:09

எந்த ஒரு பிரச்சினையையும் தீர விசாரித்து விட்டு ஆதரவு கொடுக்க வேண்டும் இல்லையேல் எதிர்க்க வேண்டும். முதிர்ச்சியடைந்த வாட்ஸப் பிள்ளையாகிப் போன எதிர்க் கட்சித் தலைவர். வெட்கம் . மன்னிப்பு கேட்க வேண்டும்


C.SRIRAM
ஜூலை 24, 2024 19:28

பதிலடி இன்னமும் மிக பலமாக இருக்க வேண்டும் . மான நஷ்ட வழக்கு போட்டு நன்றாக சுற்ற வைக்க வேண்டும்


Anand
ஜூலை 24, 2024 17:04

மானமுள்ளவன் தான் மன்னிப்பு கேட்பான்.


venugopal s
ஜூலை 24, 2024 16:52

உத்தரப் பிரதேச அரசின் கன்வர் யாத்திரையில் கடைகளின் பெயர் பலகையில் உரிமையாளர் பெயர் வைப்பது குறித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு விஷயத்தில் உங்கள் உத்திரப் பிரதேச பாஜக அரசு மன்னிப்பு கேட்குமா?


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 18:37

தேர்தல் பத்திரங்கள் அளித்தவர்கள் பெயரை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்த உத்தரவிட்ட கோர்ட், கடை உரிமையாளர்கள் பெயர்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்கிறது. நியாயமா? இது இஸ்லாமிய அடிமை நாடா?


Anand
ஜூலை 24, 2024 18:54

உண்மை என அறிந்தும் சில சமயங்களில் கோர்ட்டு தேவையில்லாமல் நாட்டாண்மை செய்து சமூக விரோதிகளுக்கு சாதகமாக தடையுத்தரவு வழங்குகிறது......


வாய்மையே வெல்லும்
ஜூலை 24, 2024 14:29

நீட் விவகாரத்தை ஊதி ஒன்னும் இல்லாத பிரச்சனைய மிகைப்படுத்தி பேனை பெருமாளாக்கி "நீட்டி "/ முழக்கி கதை அளந்த ராகுலுக்கும் எல்லாப்பிரச்சனைக்கும் தூண்டுகோலாக இருந்த திராவிடவர்கள் இருவருக்கும் என்ன ..


Barakat Ali
ஜூலை 24, 2024 13:56

தான் செய்தது அபாண்ட விமர்சனம் என்று அறிந்த பிறகு மன்னிப்புக்கேட்க பொறுப்பும், பேராண்மையும் வேண்டும் ..... அந்த அளவுக்குப்பொறுப்பானவரா ராகுல் என்னும் அரைவேக்காட்டு அரசியல்வாதி ????


மோகனசுந்தரம்
ஜூலை 24, 2024 13:51

அந்த ஆள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார். அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார்.


Sridhar
ஜூலை 24, 2024 13:12

அந்த ஆளு அவுங்க ஆட்சியில நடந்த மாபெரும் ஊழல்களுக்கே மன்னிப்பு கேக்கல, இந்த ஜுஜுபி விசயத்துக்கா மன்னிப்பு கேக்கப்போறார்?


A Viswanathan
ஜூலை 24, 2024 14:03

இவருக்கு நீட்டை பற்றி புரிதல் இருந்தால் இப்பட உளறமாட்டார் . இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுக்காதீர்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி