வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா.... கொட்டப்பாக்கு விலை சொல்றாரே, இந்த அமைச்சர்...? கடலூர் எம்பி கேட்டது “மூத்தகுடிமக்கள் கட்டண சலுகை உண்டா...? இல்லையா...?”...ன்னு “இருக்கு, இல்லை...ன்னு ஏதாச்சும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லாம... ஜவ்வு மாதிரி இழுக்குறாரு பாரு...? கடைசி வரைக்கும் இருக்கு, இல்ல...ங்ற பதிலே இல்லை...?
அமைச்சர் வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் சொல்வது முற்றிலும் தவறானது. அம்ரித் பாரத் திட்டம் என்ற பெயரில் ஸ்டேஷன்களை மேம்படுத்துவது என்பது ஏற்புடையதல்ல. அது ஒரு சாதாரண வேலைதான். அதிக மக்கள் தொகையே இல்லாத மாநிலங்களில், சிறிய ஊர்களில் மிகப் பெரிய பாலங்களை கட்டி, அதிவேக ரயில்களை ஏன் இயக்க வேண்டும்? அப்பொழுது ரயில்வேக்கு இழப்பு ஏற்படவில்லையா? அதுமட்டுமல்ல, மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை என்பது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ஒன்று. அதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. GST, டோல் கேட், பெட்ரோலியப் பொருட்கள் மீது வரி, கலால் வரி, அதானிக்கும், அம்பானிக்கும் வங்கி கடன் தள்ளுபடி எவ்வளவு கோடி? வைஷ்ணவ் சொல்வது முற்றிலும் தவறு. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்கிறார். ரஷ்யாவிலிருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, இந்தியாவில் பெட்ரோல் மிக அதிக விலைக்கு விற்பது ஏற்புடையதா? எவ்வளவு ஆண்டுகளாக குறைந்த விலைக்கு வாங்கினார்கள்? சவுதி அரேபியாவும் கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில் டிக்கட் இங்குதான் தான் அதிகமாக உள்ளது. அதிலும் தில்லுமுல்லுகள்தான் நடைபெறுகிறது. மேலும், இந்தியாவில் தான் பெட்ரோல், சமையல் எரிவாயுவின் விலை மிக அதிகம். ஆகவே இவைகளைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கட்டணச் சலுகையை உடனே அமல் படுத்தப்பட வேண்டும் என்பது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நிறைவேற்றுமா BJP அரசு?
ஏன் சின்ன ஊரில் உள்ள நாங்களும் மனிதர்கள் தானே. எங்கள் ரயில் நிலையம் நன்றாயிருக்க வேண்டாமா. மக்களிடம் இது போன்ற கிறுக்கு நிறைய உள்ளது. கிராமம் என்றால் சாலை இருக்காது. பஸ்கள் ஓட்டை பஸ்கள்.
மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் கொள்ளையடிக்கும் கட்டணம். அதை யாரும் கேட்பதில்லை. அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். எலக்ட்ரிக் ரயிலுக்கு ஐந்து ரூபாய் கூட்டிவிட்டால் கூப்பாடு போட ஒரு பெருங்கூட்டமே இருக்கும். அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மூத்த குடி மக்களின் தள்ளுபடி காசு ஒன்றும் மந்திரத்தால் இலவசமாய் வருவதில்லை. மறைமுகமாய் மற்ற மக்களின் தலையிலே விழும்.
எல்லோரும் சோஷியல் மீடியாவில் இரயில்வே துறையை விமரிசிக்கின்றனர். நான் அறிந்த வரையில் ரயில்வே துறையின் நிர்வாக முடிவுகளை எடுப்பது ரயில்வே போர்டு தான். ரயில்வே போர்டு மெம்பர்கள் மத்திய அரசாங்கத்தால் இட ஒதுக்கீட்டு முறைப்படி தேர்வாகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட ஒதுக்கீட்டு முறையில் தேர்வாவதால், அவர்களது குறிக்கோள் வேறு மாதிரி. பொது மக்கள் நலன் பற்றி அவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அவர்களது டார்கெட் வேற. அதனால் நாம் தொண்டை கிழிய கத்தினாலும் மாறாது. அவ்வப்போது ஆட்சியாளர்கள் சாட்டையை சழற்ற வேண்டும் நடக்குமா?
இது மிக அநியாயம். பகல் கொள்ளை. இந்தமுறை மாற்றப்படவேண்டும். ஒருமுறை நான் இப்படி அபராதத்துடன் டிக்கெட் வாங்கி பயணம் செய்தேன். அபராதம் இல்லாமல் வெறும் டிக்கெட் கட்டணம் மட்டும் வசூலிக்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இப்படி நடந்தால் ஒன்றும் செய்யமுடியாது. மோடி ஆட்சியில் இப்படி நடக்கலாமா?
அமைச்சர் வைஷ்ணவ் பாராளுமன்றத்தில் சொல்வது முற்றிலும் தவறானது.
ரயில் பயண கட்டணங்கள் மற்ற நாடுகளை விட குறைவுதான். ஆனால், பயண சீட்டை ரத்து செய்வதால் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். மேலும் தட்கல் பிரீமியம் தட்கல் என்று சொல்லி வசூலித்து அதை ஈடுகட்டி லாபம் பார்ப்போம். அப்புறம், ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் இருந்தாலும், ரயில்வேயே தானாக காத்திருப்பு பயணசீட்டை ரத்து செய்தாலும் அதற்கும் கட்டணம் உண்டு. ஆனால், தேவையான ரயில்களை இயக்க மாட்டோம். சமீபத்தில், தீபாவளிக்கு தென்காசி செல்ல முன்பதிவு செய்யும்போது காத்திருப்பு பட்டியல் 680 என்று கிடைத்தது. எப்படி இவ்வளவு பேருக்கு காத்திருப்பு பட்டியலை பூர்த்தி செய்ய முடியும்? அது முடியாவிட்டால், எப்படி இவ்வளவு பயண சீட்டுக்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு உதாரணத்திற்காக 180 பேருக்கு பயண சீட்டு உறுதியாகிறது என்று வைத்துக்கொள்வோம். மீதமுள்ள 500 x 60 = ரூ.30000 ரயில்வேக்கு காத்திருப்பு பயணசீட்டை ரத்து செய்வதால் லம்பாக கிடைக்கிறது. இது ஒரு ரயிலின் உதாரணம்தான். நாடுமுழுதும் கணக்கிட்டால் எவ்வளவு என்று பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே. இப்படி மறைமுக கொள்ளைதான் நாடு முழுதும் நடக்கிறது. இது மோடிஜிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. பாவம் அவர் வேறு மக்கள் நல ஆட்சியை கொடுக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.
சலுகை கொடுத்தால் ஒவ்வொரு ரயிலிலும் பாதிக்கு மேல் மூத்த குடிமக்கள் மட்டுமே இருப்பர். அவசியமின்றி பயணம் செய்வார்கள். அவசியமாய் பயணிப்போர்களுக்கு டிக்கெட் confirm ஆகாது.
பதிலே இல்லை
முடியாது இது தான் பதில்