உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களா: காங்., கூட்டணியை முறிப்பீர்களா ஸ்டாலின்?: பிரதமர் மோடி கேள்வி

தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்களா: காங்., கூட்டணியை முறிப்பீர்களா ஸ்டாலின்?: பிரதமர் மோடி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜம்பேட்டை: ''தென்னிந்திய மக்கள் ஆப்ரிக்கர்களை போல இருப்பதாக கூறிய காங்., தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சை ஏற்கிறீர்களா? இத்தகைய பெரிய குற்றச்சாட்டுக்கு பிறகு, தமிழரின் சுய மரியாதைக்காக, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் முன் வருவாரா?'' என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா, ''இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களை போலவும் தோற்றமளிக்கின்றனர். இந்தியாவை போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்'' என சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறார்.இது தொடர்பாக ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தென்னிந்திய மக்கள் ஆப்ரிக்கர்களை போல இருக்கிறார்கள் என்று காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியதை ஏற்கிறீர்களா என்பதை கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்களிடம் கேட்க விரும்புகிறேன். தமிழக கலாசாரம் பற்றிப் பேசும் அம்மாநில முதல்வர் ஸ்டாலின், இத்தகைய பெரிய குற்றச்சாட்டுக்கு பிறகு, தமிழரின் சுய மரியாதைக்காக, காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொள்ள முன் வருவாரா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தநாவின் பரிதாபம்
மே 09, 2024 08:33

மோடிஜி, இவர்களுக்கு ஒரே கொள்கை, காசு, பணம், துட்டு மணி மணி, அதற்காக எதையும் செய்வார்கள். ஜுன் 4 க்கு பிறகு உங்களின் அதிரடி ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறோம்


R Kay
மே 09, 2024 00:38

அதெப்படி? நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இனம் இனத்தோடுதான் சேரும்


venugopal s
மே 08, 2024 23:16

மத்திய பாஜக அரசின் இணை அமைச்சர் திருமதி ஷோபா அவர்கள் பெங்களூரு குண்டு வெடிப்பை தமிழர்கள்‌ தான் செய்தார்கள் என்று வீண் பழி சுமத்திய போது இவர் தூங்கிக் கொண்டு இருந்தாரா?


ஆரூர் ரங்
மே 09, 2024 08:18

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் தமிழ் பேசுபவர்கள். சில விதங்களில் தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்களாம்.


rao
மே 09, 2024 09:02

Few people in NADU gave support to the accused to conduct the blast, hence the minister had to give a statement.


venugopal s
மே 08, 2024 22:31

இந்தியாவில் எல்லோருமே தென் இந்தியர்கள் உட்பட ,ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் தான் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறதே!


Kasimani Baskaran
மே 08, 2024 21:49

காவிரித்தண்ணீர் முக்கியமில்லை, சனாதனம் கூட முக்கியமில்லை பிறகு ஆப்ரிக்கன் மட்டும் எப்படி முக்கியமாகும்?


Mari muthu
மே 08, 2024 20:48

அரசியல் செய்யாம அவியால செய்வாங்க


Nagendran,Erode
மே 08, 2024 20:46

நாங்கள் ஓங்கோலில் இருந்து வந்தவர்கள் எங்கள் தாய்மொழி தெலுங்கு ஆனால் இப்போது நாங்கள் தமிழர்களாகி விட்டோம் அப்படியென்றால் நாங்கள் யார்?


Thirumal s S
மே 08, 2024 20:36

இதில் என்ன தவறு வட இந்தியன் பார்வை அதுதானே இதில் மோதி அமித் ஷாவும் அடுங்குவர்


Venkatasubramanian krishnamurthy
மே 08, 2024 20:23

அவர்கள் திராவிட இயக்கம் நீதிக்கட்சி காலம் தொட்டே கிழக்கிந்தியர்களை ஆதரித்தவர்கள் திராவிடர்களை வெள்ளையர்கள் என மாற்றிக் கூறுமாறு வேண்டுமானால் சாம் பிட்ரோடாவிடம் கோரிக்கை வைப்பார்களே தவிர ஜி ஊழலுக்கு வாய்ப்பளித்த கான்கிரஸை அவர்கள் எதிர்க்க மாட்டார்கள்


Ramesh Sargam
மே 08, 2024 19:48

சாம் பிட்ரோடா - என்னவொரு கீழ்த்தரமான பேச்சு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை