உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரதட்சணை கேட்டு இளம்பெண் கொலை

வரதட்சணை கேட்டு இளம்பெண் கொலை

நொய்டா:புதுடில்லி அருகே வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பெண் உடல் போலீசார் கைப்பற்றப்பட்டது. வரதட்சணைக் கொடுமையால் தங்கள் மகளை கணவரே கொலை செய்து விட்டதாக பெண் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, கிரேட்டர் நொய்டா துணை கமிஷனர் அசோக் குமார் சர்மா கூறியதாவது:கிரேட்டர் நொய்டா துகல்பூரில் ஒரு பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சென்று, 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் உடலை மீட்டோம். உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.அந்தப் பெண்ணின் கணவர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார் என்பதும், தற்போது தலைமறைவாக இருக்கிறார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.உ.பி., மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இந்த தம்பதி ஆறு நாட்களுக்கு முன்புதான் துகல்பூரில் குடியேறியுள்ளனர். மேலும், தங்கள் மகளை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.இதுகுறித்து, நாலெட்ஜ் பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணின் கணவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை