உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளியுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளியுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆறாவது கட்ட லோக்சபா தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. தேர்தல் பணியில் பொதுமக்களின் தீவிரப் பங்கேற்பு இருந்தால் தான் ஜனநாயகம் செழித்து, துடிப்புடன் காட்சியளிக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் தங்கள் ஓட்டு உரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
மே 26, 2024 07:53

வெலை இல்லாத திண்டாட்டத்தை இன்னும் ஊக்குவிப்பேன்.


அப்புசாமி
மே 25, 2024 17:06

அம்பது பர்சண்ட்டுக்கே முக்குறாங்க.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை