உள்ளூர் செய்திகள்

உலகத் தரத்தில் ஜிப்மர்

ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் என்பதன் சுருக்கமே ஜிப்மர். மருத்துவ கல்விநிறுவனமாக மட்டுமின்றி குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாகவும் ஜிப்மர் உள்ளது.1823ம் ஆண்டு பிரான்ஸ் அரசால் இகோல் டி மெடிசின் டி பாண்டிசேரி என்ற பெயரில் ஜிப்மர் தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பின்னர் மருத்துவக்  கல்லூரி என்ற பெயரில் இயங்கியது. பின்னர் 1964ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமரின் பெயர் சூட்டப்டபட்டது. ஜிப்மர் தற்போது 195 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இதன் வளாகம் ஒரு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஹாஸ்டல், அலுவலர் குடியிருப்பு, இரண்டு வங்கிகள், ஒரு தபால் நிலையம், ஒரு கோயில், விளையாட்டு மைதானங்களுடன் அமைந்துள்ளது. இங்கு தற்போது 200 மருத்துவ ஆசிரியர்களும், 360 மருத்துவர்களும் இங்கு பணியாற்றுகின்றனர். இது தவிர ஏறத்தாழ 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் ஜிப்மர் இயங்கிவருகிறது. முன்பு புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஜிப்மர் பின்னர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இங்குள்ள இளநிலை படிப்புகள்எம்.பி.பி.எஸ்.,பி.எஸ்சி., மெடிக்கல் லேபாரட்டரி டெக்னிஷியன்பி.எஸ்சி., நர்சிங்பி.எம்.ஆர்.எஸ்சி., முதுநிலை படிப்புகள் எம்.டி., பிரிவில்ஜெனரல் மெடிசின்ஆப்ஸ்டெட்ரிக்ஸ்அண்டு கைனகாலஜிபேத்தாலஜிமைக்ரோபயாலஜிபிசியாலஜிபார்மகாலஜிபீடியாட்ரிக்ஸ்அனஸ்தீசியாலஜிடெர்மட்டாலஜிபயோகெமிஸ்ட்ரிகம்யூனிட்டி மெடிசின்சைக்கியாட்ரிடி.பி., அண்டு ஆர்.டி., எம்.எஸ்., பிரிவில்ஜெனரல் சர்ஜரிஆர்த்தோ சர்ஜரிஆப்தமாலஜிஆர்த்தோ ரைனோ லாரிங்காலஜிஅனாடமி எம்.சிஎச்., பிரிவில்யூராலஜிகார்டியோ தொரேயிக் சர்ஜரிடிப்ளமோ படிப்புகளாகடி.சி.எச்.,டி. ஆர்த்தோடி.ஓ.,டி.லெப்., பி.எச்டி., பிரிவில்அனாடமிபிசியாலஜிபயோகெமிஸ்ட்ரிபேத்தாலஜிமைக்ரோபயாலஜிபார்மகாலஜி இது தவிரஎம்.எஸ்.,எம்.எஸ்சி., மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரிசர்டிபிகேட் கோர்ஸ் இன் பிரெஞ்ச்ஹையர் டிப்ளமோ கோர்ஸ் இன் பிரெஞ்ச்எம்.ஆர்.ஓ., எம்.ஆர்.டி., ஆகிய படிப்புகளும் இங்கு உள்ளன. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நாளிதழ்களில் அறிவிப்பு வரும். முதுநிலை படிப்புகள் குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பு வரும். இதற்கான விண்ணப்பங்கள் ஜிப்மர் அலுவலகத்திலேயே கிடைக்கும். நேரிலோ தபால் மூலமாகவோ இவற்றை பெற முடியும். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான நுழைவுத்தேர்வு புதுச்சேரி, சென்னை, ஐதராபாத், கோல்கட்டா, திருவனந்தபுரம், டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மே மாதத்தில் நடத்தப்படும். இதில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பிரத்யேக இடஒதுக்கீடு உண்டு.   முதுநிலை படிப்புகளுக்கு புதுச்சேரியிலும், சென்னையிலும் நுழைவுத்தேர்வு நடத்துகின்றனர். இதில் ஏறத்தாழ பாதி இடங்கள் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., முடித்தவர்களுக்கே ஒதுக்கப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஜிப்மரில் படிக்கின்றனர். இது தவிர நேபாளம், பூடான், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !