ஐ.டி., துறையின் எதிர்காலம்
இதனால் இந்தியாவில் ஐ.டி., நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. முன்னணி வங்கிகள் திவாலாவதாலும், வங்கிகள் இணைக்கப்படுவதாலும், முன்பு போல் அவற்றிடம் இருந்து அவுட்சோர்சிங் பணிகள் இப்போது கிடைப்பதில்லை. குறுகிய கால பாதிப்புகள் தற்போது ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடிக்கடி பிற நிறுவனங்களுக்கு மாற முடியாது. கடந்த சில ஆண்டுகளாக 10 முதல் 15 சதவீதம் வரை சம்பள உயர்வு பெற்றவர்கள் இந்த ஆண்டு 8 முதல் 10 சதவீதம் வரையே சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியும். ஐ.டி., நிறுவனங்களில் புதியவர்களுக்கும், அனுபவம் உள்ளவர்களுக்கும் வேலை கிடைப்பது முன்பு போல எளிதாக இருக்காது. நீண்ட கால பாதிப்புகள் பிற துறைகளின் வளர்ச்சிக்கு ஐ.டி., துறை இன்றியமையாததாக உள்ளது. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்கள் ஐ.டி., துறை தொடர்பான தங்களது செலவீனங்களை பெரிய அளவில் குறைக்க முடியாது. எனினும் ஐ.டி., நிறுவனங்கள் முன்பு போல ஒரே சமயத்தில் பெரிய எண்ணிக்கையில் ஆளெடுப்பது குறையும். ஐ.டி., நிறுவனங்களில் தேவையான சமயத்தில் மட்டும் சரியான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கேம்பஸ் இன்டர்வியூவில் மூன்றாம் ஆண்டு மாணவர்களை தேர்வு செய்யும் நிலைமாறி கடைசி செமஸ்டரில் மட்டுமே ஐ.டி., நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தும். கேம்பஸ் இன்டர்வியூ நடக்குமா? கடந்த சில ஆண்டுகளை போல அல்லாமல் கேம்பஸ் இன்டர்வியூகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையலாம். ஒரே மாணவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலை தர முன்வருவதால் சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதை தற்போது ஐ.டி., நிறு வனங்கள் விரும்பாது. கேம்பஸ் இன்டர்வியூகளை குறைத்து தேவையான போது மட்டும் ஆளெடுக்கும் முறையை ஐ.டி., நிறுவனங்கள் கையாளும். மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஐ.டி., துறையை நோக்கி ஓடாமல், தங்களால் எந்த துறையில் சாதிக்க முடியும் என்பதை தேர்வு செய்து, அந்த துறையில் படிக்கலாம். தமிழகத்திலும் ஐ.டி., வேலைவாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளதால், மாணவர்கள் பிற துறைகளிலும் ஆர்வம் செலுத்தலாம். ஐ.டி., படிக்கும் மாணவர்கள் முதுநிலை படிப்பையும் தொடரலாம். தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்திக்கொள்வதும் அவசியம். கல்லூரிகள் என்ன செய்ய வேண்டும்? கல்லூரிகள்களில் இருக்கும் வேலைவாய்ப்பு அதிகாரிகள், ஐ.டி.,துறையில் இருக்கும் சூழலை முற்றிலுமாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு மாணவர்களை தயார் செய்ய வேண்டும். இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் இருந்தே வேலைவாய்ப்பை வழங்க கூடிய பயிற்சிகளை தொடங்கலாம். மேலை நாடுகளில் இருப்பது போல ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம். உதாரணமாக ஒரு கல்லூரியில் 60 சீட்கள் இருந்தால் 30 சீட்களுக்கு வழக்கமான நேரத்திலும், மீதம் உள்ள 30 சீட்களுக்கு டிசம்பர் மாத வாக்கிலும் மாணவர் சேர்க்கையை வைத்துக் கொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் படிப்பை நிறைவு செய்து விட்டு, வேலை தேடும் நிலை மாறும். - ஜெயபிரகாஷ் காந்தி