சிங்கப்பூரில் இந்தி தேர்வு; இந்திய சிறுமி முதலிடம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடத்தப்பட்ட இந்தி தேர்வில், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி, முதலிடம் பெற்றார். சிங்கப்பூரில் வசிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, பள்ளிகளில், இரண்டாவது கட்டாய மொழி பாடமாக, இந்தி உள்ளது. சர்வதேச இந்தி அமைப்பு சார்பில், சிங்கப்பூரில் ஆண்டுதோறும், மாணவ மாணவியருக்கு இந்தி தேர்வு நடத்தப்பட்டு, &'இந்தி பிரேர்னா விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், 9வயது சிறுமி, ஷாமியாகான் முதலிடம் பிடித்தார். 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில், பேச்சுப் போட்டியில், அன்சூல் துகோலும், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் சஞ்சய் குமாரும் முதலிடத்தைப் பிடித்தனர்.பரிசுகளை, சிங்கப்பூருக்கான இந்திய துாதர் விஜய் தாக்குர் சிங் வழங்கினார்.