உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழித்திறனை வளர்க்க தமிழாசிரியர்களுக்கு பயிற்சி

கோவை: மாவட்டத்தில் இயங்கி வரும் 154 மேல்நிலை மற்றும் உயர்நிலை சி.பி.எஸ்.இ., பள்ளி தமிழாசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், கோவை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. 130க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) புனித அந்தோணியம்மாள் கூறுகையில், மூன்று கட்டங்களாக பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.முதல் கட்ட பயிற்சி வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் தமிழ் வாசிப்பு, எழுதுதல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்த பெரிதும் உதவும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்