உள்ளூர் செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு செவிலியர்கள் கூந்தல் தானம்

கோவை: இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் ( டி.என்.ஏ.ஐ.) தமிழ்நாடு கிளை 2024ம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயாளிகளுக்காக அதிகபட்ச செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை துவக்கியுள்ளது.தமிழகத்தின் ஏழு இடங்களில் மண்டல வாரியாக கூந்தல் தான சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, கே.எம்.சி.எச்., நர்சிங் கல்லுாரியில், டி.என்.ஏ.ஐ.,மற்றும் ஆசியன்புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து மாபெரும் கூந்தல் தானம் வழங்கும் நிகழ்வை நடத்தியது.கோவை மண்டல இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கம் உறுப்பினர்கள், கே.எம்.சி.எச்.,நர்சிங் கல்லுாரி உள்பட ஒன்பது செவிலியர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு, தங்கள் கூந்தலை தானம் செய்தனர்.டாக்டர் என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் தவமணி, கே.எம்.சி.எச்., நர்சிங் கல்லுாரி முதல்வர் மாதவி, டி.என்.ஏ.ஐ., தென்மண்டல துணைத் தலைவர் ஜெயினி கெம்ப் செயற்குழு உறுப்பினர் ஜெயசுதா மற்றும் டாக்டர் ஆனிகிரேஸ் கலைமதி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்