ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி
தமிழர் நாகரிகம், பண்பாடு, தொல்லியல் சார்ந்த விஷயங்களை ஆசிரியர் அறிந்து மாணவர்களுக்கு கற்பிக்க, ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு இன்று முதல் 24ம் தேதி வரை தொல்லியல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்வான 28 ஆசிரியர்கள் இன்று கோவை செல்கின்றனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஆதிச்சநல்லுார், கீழடி பகுதிகளுக்கு கள ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுவர். செப்பேடு, வட்டெழுத்து, நாணயவியல், கல்வெட்டு உள்ளிட்ட, 14 தலைப்புகளில் வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். மண்டல அளவில் பயிற்சி பெறுவோர், மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவர் என்றனர்.