உள்ளூர் செய்திகள்

8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு

உடுமலை: மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு 2025ம் ஆண்டுக்கான தேர்வு, வரும், பிப்., 22ம் தேதி நடக்கிறது. கூடுதல் தகவல்களை, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்