உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கெஜ்ரிவாலுக்கு அனுதாப அலை வீசுமா?

கெஜ்ரிவாலுக்கு அனுதாப அலை வீசுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவால் கைதாகியுள்ளார். மக்கள் மத்தியில் இவருக்கு அனுதாப அலை வீசும். இது பா.ஜ.,வின் வெற்றியைக் கடுமையாக பாதிக்கும்' என, ஆம் ஆத்மி கட்சியினர் சொல்கின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்த சில தலைவர்கள் கூட, 'இந்த சமயத்தில் கைது தேவை தானா' என, வெளியே சொல்லாமல், நெருக்கமானவர்களிடம் வருத்தப்படுகின்றனர்.ஆனால் பா.ஜ., தலைமை எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. 'இது பா.ஜ.,வை பெருமளவில் பாதிக்கும்' என, பலரும் கூறினர். ஆனால், கட்சி தலைமை அதைப் பற்றி கவலைப்படவில்லை. விளைவு-, அதிக தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், காங்கிரசின் சீனியர் டில்லி தலைவர்களான, அஜய் மாகன் உட்பட பலர், 'மதுபான ஊழலில் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்டுள்ளார்' என, கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இப்போது கெஜ்ரிவால் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அப்படியே பிளேட்டை மாற்றி, 'மோடியின் அராஜகம்' என, சொல்கின்றனர் இந்த காங்., தலைவர்கள்.'மதுபான ஊழல் வழக்கில், ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தவிர, டில்லி உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் கைதை தடுக்க மறுத்து விட்டது; அத்துடன், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், ஊழலை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.'கெஜ்ரிவாலின் சகாக்கள் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் இதே ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்; அவர்களுக்கு ஜாமின் வழங்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 'இதையெல்லாம் பார்க்கும் போது, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசாது' என்கின்றனர் பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 25, 2024 12:02

கெஜ்ரிவால் குரு அண்ணா ஹசாரே கூட கெஜ்ரிவால் தன்னுடன் இருந்ததற்காக வருத்தப் பட்டுள்ளார் வேறு எந்த விஷயத்தில் ஆவது கைது நடவடிக்கை எடுத்திருந்தால் அனுதாப அலைவீச வாய்ப்பு உண்டு இந்த கைது மது மற்றும் போதை சம்பந்தப்பட்டது ஆகவே பெரிய அனுதாப அலை ஒன்றும் வீச வாய்ப்பு இல்லை பாஜக தேர்தல் நேரத்தில் தான் கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ வீட்டில் சோதனை நடத்தி பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலும் முறை சம்மனை மதிக்காதற்கு காரணம் இழுத்தடித்தால் தேர்தல் நேரத்தில் கைது செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் அப்படியே கைது செய்தாலும் அனுதாப ஓட்டு பெறலாம் என்ற எண்ணத்தில் தான் ஆனால் காலம் மிக விரைவாக மாறிவிட்டது மக்கள் மனநிலையும் விரைவாக மாறிவிட்டது முன்பு ராஜிவ் காந்தி கொலைக்கு முன் நடந்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியுற்றது ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் நடந்த வாக்கெடுப்பு நடந்த அத்துணை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி பிடித்து அது அப்போது இருந்த மக்கள் மனநிலை ஆனால் இப்போது நிலைமை சுத்தமாக மாறிவிட்டது அளவுக்கு அதிகமான ஊடகங்கள் தினம் தினம் திருட்டு கொள்ளை கற்பழிப்பு ஊழல் ஏமாற்றுவது போன்ற செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்து ஃபிளாஷ் நியூஸ் போட்டு நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை வெளியே சொல்லாததால் மக்கள் மனமும் கல்லாகி போய்விட்டது இனிமேல் அனுதாபம் பரிதாபம் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் மக்கள் மனதிலிருந்து முற்றிலும் மறைந்து விட்டது அனுதாப ஓட்டு எல்லாம் பெறலாம் என்பது இனிமேல் கனவு தான் அரசியல் என்பது ஊழல் தான் என் மக்கள் மனதில் நன்கு பதிந்து விட்டது இதில் இனிமேல் யார் ஊழல் குறைவாக செய்துள்ளார் அல்லது அதிகமாக செய்துள்ளார் என்பதே இனி பேசு பொருளாகும்


Sathyan
மார் 24, 2024 04:36

அரசியல் தலைவராக இருந்தால் கூட மக்கள் ஊழல்வாதிகளுக்கு அனுதாப படுவதை நிறுத்த வேண்டும் அப்போது தான் மக்கள் விழிப்புற்று, தெளிந்த மனநிலையை பெறுவார்கள்


c.k.sundar rao
மார் 24, 2024 11:45

percent true and correct, people should discard these politicians for life


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை