உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு புது தகவல்

8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசு புது தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சென்னை - சேலம் இடையிலான எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் எப்போது முடிக்கப்படும் என்பதற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னை - சேலம் எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை திட்டம் குறித்து, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர், நிதின் கட்கரி ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது:சென்னை - சேலம் இடையே எட்டு வழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டு விட்டது.ஆனாலும் வழக்குகள் மற்றும் சில அனுமதிகளை பெற வேண்டிய விஷயங்களில் கால தாமதம் தொடர்கின்றன. இதனால், இந்த திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்துவதற்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுதவிர, நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள், திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு ஆகியவை இன்னும் முடிவாகவில்லை.இவை எல்லாம் முடிந்த பிறகே, திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் போன்றவற்றை இறுதி செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.-- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thiruvenkatachari Gunaseelan
ஆக 02, 2024 05:13

பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள சாலை அகலப்படுத்தாதே ஏன் என்பதை தெரியவில்லை . பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது


தமிழ்வேள்
ஆக 02, 2024 15:07

முக்காலே மூணுவீசம் இடங்களை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டு சில்லறை பார்த்துக்கொண்டிருப்பது விக்கிரமராசா வகையறா ? அப்புறம் எப்படி சாலையை அழைக்கப்படுத்த ?


Jay
ஆக 01, 2024 14:43

அரசுக்கு தாழ்மையான வேண்டுகோள். இடம் எடுக்கும் போதே அதி வேக ரயில் போடுவதற்காக சேர்த்து எடுத்துக் கொண்டால் வருங்காலத்தில் சென்னையையும் சேலத்தையும் புல்லட் ட்ரெயின் போன்ற அதிவேக ரயில்கள் மூலம் இணைக்கலாம். நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து இந்த வேலையை செய்யலாம்.


குரு, நெல்லை
ஆக 01, 2024 21:53

அருமையான யோசனை


Ramamurthy N
ஆக 01, 2024 11:15

சென்னை-சேலத்திற்கு பதிலாக சென்னை-கன்னியாகுமரி பாதையை 8 வழிபாதையாக மாற்றினால் அதிக மக்கள் பயன் பெறுவார்கள். விபத்துகள் குறையும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை