உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: துாக்கம் போச்சு!

டில்லி உஷ்ஷ்ஷ்: துாக்கம் போச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தி.மு.க.,விற்கும், அ.தி.மு.க.,விற்கும் இடையே தான் போட்டி என, இரண்டு கட்சிகளும் சொல்லி வருகின்றன. '40 தொகுதிகளும் நமதே என, பிரசாரம் செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், களத்தில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது என முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், அவருக்கு துாக்கம் போச்சு' என, கிண்டலடிக்கின்றனர் பா.ஜ.,வினர்.முதல்வரின் நெருங்கிய உறவினர், தேர்தல் களம் எப்படியிருக்கும் என, தனியார் நிறுவனம் வாயிலாக ரகசிய சர்வே எடுத்துள்ளாராம்.இதன் முடிவுகளைப் பார்த்து, ஸ்டாலின், 'ஷாக்' ஆனதாக சொல்லப்படுகிறது. காரணம், இந்த சர்வேயின்படி பல தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாம்.இந்த சர்வே முடிவுகளை, அ.தி.மு.க.,வுடன் தி.மு.க., பகிர்ந்து கொண்டுள்ளதாகவும், பங்காளிகள் இருவரும் மறைமுகமாக ஒன்று சேர்ந்து, பா.ஜ.,வை தமிழகத்தில் நுழைய விடக் கூடாது என கூறியதாகவும், டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.பா.ஜ.,விற்கு எதிராக கடுமையான பிரசாரம், பணம் என இரண்டு ஆயுதங்களையும் தீவிரமாக பயன்படுத்த, தி.மு.க., தலைவர்களுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், அனைத்து சமூக வலை தளங்களிலும் பா.ஜ.,விற்கு எதிராக தவறான தகவல்களை தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.இதை அறிந்த பா.ஜ.,வும் சாம, தான, பேத, தண்டம் என, அனைத்து வழிகளிலும் தி.மு.க.,வை எதிர்க்க தயாராக உள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Godfather_Senior
ஏப் 02, 2024 18:23

த்ராவிட கழகங்கள் அனைத்துமே தீய சக்திகள் அதை விரட்டி ஒழிப்பதே இந்த தேர்தலின் கடைசீ வாய்ப்பு அயல்நாட்டினரின் அடிமைகள் இவர்கள் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொத்து சேர்த்துள்ளனர் இதன் காரணமாக தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாறிவிட்டது இந்த தேர்தலில் கழகங்களை தோற்கடிக்கும் வாய்ப்பை இழந்தால் இனி தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை என்பதே உண்மை


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 31, 2024 13:05

சென்ற சட்டசபை தேர்தலிலேயே திமுகவும் அதிமுகவும் இணைந்து பாஜகவை தோற்கடிக்க முயற்சி செய்தது ஆனால் எதிர்பாராத விதமாக பாஜக தொகுதிகளை கைப்பற்றியது கோவையில் வானதியை வீழ்த்த திமுக அதிமுக கூட்டு சேர்ந்தது ஆனால் எதிர்பாராமல் பாஜக வெற்றி பெற்றது இதன் பின்னர் தான் அண்ணாமலை அதிமுகவிற்கு எதிராக செயல் பட ஆரம்பித்தார்


subramanian
மார் 31, 2024 12:35

அதிகார ஆணவம் பிடித்த திமுக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி