உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

சுரண்டப்படும் குளங்கள்; அதிகாரிகள் வேடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் விவசாயிகள் போர்வையில், நீர்நிலைகளில் இரவு, பகலாக கிராவல் மண்ணைச் சுரண்டியெடுத்து, கடத்தல் கும்பல் விற்பனை செய்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம், 276 நீர் நிலைகளில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க, விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அங்கு வண்டல், களிமண் போன்றவை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.வண்டல் மண் பெயரில் கிராவல் மண்ணை சுரண்டியெடுத்து கடத்தும் பணியில், விவசாயிகள் போர்வையில், கடத்தல் கும்பல் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.தாராபுரம், கெத்தல் ரேவ், தேர்பாதை, ரங்கம்பாளையம் போன்ற இடங்களில் உள்ள குளங்களில் போலி அனுமதி ரசீதுகளை வைத்து இரவு, பகலாக கிராவல் மண் கடத்தப் படுகிறது.வருவாய் துறையினரிடம் கேட்டால், அனுமதி கொடுத்ததோடு பணி முடிந்து விட்டதாகவும்; வண்டல் மண் தான் எடுக்கப்படுவதாகவும் மழுப்பலாக பதில் கூறுகின்றனர். கனிமவளத் துறையினரும் மவுனமாக உள்ளனர். ஒரு லோடு கிராவல் மண் 1,500 முதல், 3,000 ரூபாய் வரை கடத்தி விற்கப்படுகிறது. ஆளும்கட்சியினர் ஆதரவோடு நடைபெறும் மண் கடத்தலை, அதிகாரிகள் வேடிக் கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிராவல் மண் கடத்தும் கும்பல் மீது கடும் நட வடிக்கை தேவை. அந்த நீர்நிலைகளில் மண் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை