மேலும் செய்திகள்
தந்தைக்கு அவமானம்; கொந்தளித்த சகோதரிகள்
22 hour(s) ago | 2
சுயசரிதை எழுதியது ஏன்?: மனம் திறந்தார் சோனியா
17-Nov-2026 | 26
மேற்கு தொடர்ச்சி மலையில், 1,525 மீட்டர் உயரத்தில் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் குடகு அமைந்துள்ளது.வரலாற்றின்படி, க்ரோததேசம் என்பது தான் பின்னாளில் 'கொடவா' என மாறியது. இங்கு, கொடவா பழங்குடியினர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.குடகை, 9, 10ம் நுாற்றாண்டுகளில் கங்க மன்னர்களும்; 11ம் நுாற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது. அதை தொடர்ந்து ஹொய்சாளர்கள் ஆட்சி செய்தனர். 1834ல் ஆங்கிலேயர்கள் இப்பகுதியை கைப்பற்றும் வரை, 'ஹலேரி ராஜாவின்' ஆட்சியின் கீழ் இருந்தது. 1956ல் கர்நாடகாவுடன் இணையும் முன், குடகு தனி மாநிலமாக இருந்தது. அதிக மழை
இந்தியாவில் காபி உற்பத்தியில் குடகு முதலிடத்தில் உள்ளது. அத்துடன் நாட்டில் அதிக மழை பெய்யும் இடங்களில் இதுவும் ஒன்று.இம்மாவட்டத்தில், கொடவா, துளு, கவுடா போன்ற பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இதில் கொடவா சமூகம், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரியளவில் உள்ளனர். எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள் மைசூரு அல்லது மங்களூருக்கு செல்லலாம். ரயிலில் செல்பவர்கள், மங்களூரு ஜங்ஷன், மைசூரு ஜங்ஷனில் இறங்கி, அங்கிருந்து கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், தனியார் பஸ்களில் மடிகேரி செல்லலாம்.- நமது நிருபர் -
22 hour(s) ago | 2
17-Nov-2026 | 26