உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காமராஜர் ஆட்சியா... கட்சி வளர்ச்சியா? காங்., பிரமுகர் பேச்சால் குஸ்தி

காமராஜர் ஆட்சியா... கட்சி வளர்ச்சியா? காங்., பிரமுகர் பேச்சால் குஸ்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் போக்கால், அக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை எழும்பூரில் நடந்தது. முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., ஆரூண், டி.செல்வம், சொர்ணா சேதுராமன், ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் பேசியதாவது:காமராஜர் ஆட்சி நோக்கி செல்கிறோமா அல்லது கட்சி வளர்ச்சி நோக்கி செல்கிறோமா என்பது குறித்த அறிவுரையை தெரிவிக்க வேண்டும். 'இண்டி' கூட்டணி பலமாக இருப்பதால், காமராஜர் ஆட்சி சாத்தியமா என்பது தெரியவில்லை. கட்சி வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிர்வாகிகளால் தான், கட்சி எழுச்சியாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வத்துடன் செயல்பட்டு, கட்சி பணியாற்றி வருபவர்களால், கவுன்சிலராகக் கூட முடியவில்லை. அந்த நிர்வாகிகளின் உழைப்பு காரணமாக, 10 எம்.பி.,க்கள், 25 எம்.எல்.ஏ.,க்கள், 15 கவுன்சிலர் சீட்டுகளை வாங்குகிறோம். அதை அறுவடை செய்பவர்கள், கட்சிக்கு உழைத்த நிர்வாகிகளுக்கு எந்த உதவியும் செய்ய முன்வருவதில்லை; அவர்களை கண்டுகொள்வதும் இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ரஞ்சன்குமார் இப்படி பேசும்போது, பேச்சை நிறுத்தும்படி, மேடையில் இருந்த மாநில நிர்வாகி ஒருவர் கூறினார். அதற்கு ரஞ்சன்குமார், எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.மேடையில் அமர்ந்திருந்த கோஷ்டி தலைவர்கள், இரு தரப்பினரையும் சமரசப்படுத்திய பின் மீண்டும் கூட்டம் நடந்தது.

டில்லி பயணம்

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று டில்லி சென்றார். பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கட்சி தலைவர் கார்கே, மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் ஆகியோரை சந்திக்க உள்ளார். சென்னை, திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிப்பதற்கான பட்டியலுக்கு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

KR
ஆக 09, 2024 22:53

Stand alone atleast in one election and prove your strength. Congress in TN doesn't have the guts to do that. Will compete with NOTA if that happens. After that DMK will even further reduce its alms


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 09, 2024 14:18

காங்கிரஸ் திமுகவின் கிளை கட்சியாகி வருடங்கள் பல ஓடி விட்டது. இப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் யோசிக்க வேண்டியது இன்னும் எப்படி எல்லாம் திமுகவிற்கு உறுதுணையாக இருந்து திமுக விடம் நற்பெயர் வாங்கலாம் என்பது தான். அது உங்கள் காங்கிரஸ் கட்சியின் உண்மையான வளர்ச்சி. இதில் யார் யார் எவ்வளவு பங்கு திமுகவிற்கு தரப்போகிறீர்கள் என்பதில் தான் காங்கிரஸ் கட்சிக்கு உள் கோஷ்டிகள். உங்கள் அனைத்து எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் திமுகவின் வளர்ச்சிக்கு உழைத்து வாழ்வாங்கு திமுகவின் இதயத்தில் நிரந்தர இடம் பிடிக்க முயற்சிக்க வேண்டும்.


குமரி குருவி
ஆக 09, 2024 11:05

தமிழகத்தில் காங்கிரஸ் வளருவது காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு பிடிக்க வில்லை..தி.மு.க.அடிமைகள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை