உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடி கையில் எடுக்கும் சனாதன அம்பு: மாறும் தேர்தல் வியூகத்துக்கான பின்னணி

மோடி கையில் எடுக்கும் சனாதன அம்பு: மாறும் தேர்தல் வியூகத்துக்கான பின்னணி

மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் சமீபத்தில் பிரதமர் மோடி பேசியது பா.ஜ.,வின் அடுத்த கட்ட தேர்தல் வியூகத்தில் 'சனாதனம்' இனி முக்கிய இடம் பிடிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்தில் 'சனாதன பாதுகாப்பு' என்பதை ஒரு தற்காப்பு ஆயுதமாக பா.ஜ., ஏற்கனவே எடுத்து விட்டது. அடுத்த கட்டமாக மஹாராஷ்டிராவில் ஓட்டுப்பதிவு நெருங்கும் நிலையில் இந்த வியூகத்தை பா.ஜ., கையில் எடுத்திருப்பது தி.மு.க., உள்ளடக்கிய 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சங்கடமாக உருவெடுத்துள்ளது.

மோடி பேச்சு மாற்றம் ஏன்

நாட்டின் வளர்ச்சியையும் 10 ஆண்டுகளில் பா.ஜ., மேற்கொண்ட பணிகளையுமே இந்த தேர்தலின் துவக்கக் கட்டத்தில் பிரதானமாக பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தார். ராஜஸ்தானின் ஆல்வார் கூட்டத்திலிருந்து அவருடைய பேச்சு ஒரு திருப்பத்தைக் கண்டது.'காங்., ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய சொத்துகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்து விடும்' என்றார். அடுத்தடுத்த கூட்டங்களில் 'காங்., ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு அளித்து விடும்' என்றார்.ஹிந்து ஓட்டுகளை ஒருங்கிணைப்பதே இந்த பேச்சுக்கான நோக்கம் என்றாலும், வடக்கில் வெவ்வேறு மாநிலங்களில் நடக்கும் ஜாதி அடிப்படையிலான ஒருங்கிணைப்புகளே இதற்கான அடிப்படை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

விஸ்வரூபம் எடுக்கும் ஜாதி விவகாரங்கள்

குஜராத்தில் பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான புர்ஷோத்தம் ரூபாலா ஷத்ரியர்களை விமர்சிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியது அனைவருக்கும் தெரியும். 'ஆங்கிலேயர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள சம்பந்தம் போட்டுக் கொண்டவர்கள் தானே இவர்கள்' என்ற பொருள் படும்படி அவர் பேசியதற்கு ராஜபுத்திரர்கள் உள்ளிட்ட சமூகங்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.உடனடியாக தன்னுடைய பேச்சுக்கு புர்ஷோத்தம் ரூபாலா வருத்தம் தெரிவித்த போதும் போராட்டக்காரர்களின் கோபம் தணியவில்லை. 'வேட்பாளர் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்க வேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பா.ஜ., மேலிடம் செவி சாய்க்கவில்லை.குஜராத்தில் ராஜபுத்திர சமூகத்தின் எண்ணிக்கையை 5 சதவீதத்துக்குள் அடக்கி விடலாம். தவிர அந்த சமூகத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. எனவே குஜராத்தில் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும் என பா.ஜ., எண்ணவில்லை.ஆனால் அடுத்தடுத்து, ராஜஸ்தான், உ.பி., என போராட்டங்கள் பரவியது பா.ஜ.,வை சங்கடத்தில் தள்ளியது. ராஜஸ்தானில் குறைந்தது மூன்று தொகுதிகளிலும், உ.பி.,யில், 16 தொகுதிகளிலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் ராஜபுத்திர சமூகம் இருக்கிறது. குறிப்பாக 30 சதவீதம் வரை முஸ்லிம்கள்; 20 சதவீதம் வரை தலித்துகள் வசிக்கும் மேற்கு உத்தர பிரதேச தொகுதிகளில் அடுத்த நிலையில் 16 சதவீதம் வரை உள்ள ஜாட்டுகள், 12 சதவீதம் வரை உள்ள ராஜபுத்திரர்கள் ஓட்டு வங்கி பா.ஜ.,வுக்கு மிக முக்கியமானது.ஜாட்டுகளில் ஒரு பகுதியினர் இடையே விவசாயிகள் போராட்டம் சார்ந்து ஏற்கனவே மோடி அரசு மீது கோபம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ராஜபுத்திரர்கள் வேறு எதிராகத் திரும்புவது பா.ஜ.,வை சங்கடத்தில் தள்ளியது. பா.ஜ.,வில் இந்த தேர்தலில் வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டவர்களும் கட்சி தலைமைக்கு எதிராக தங்கள் பலத்தைக் காட்ட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தினர்.'ராஜபுத்திரர்களை ஓரங்கட்ட சதி நடக்கிறது. ராஜபுத்திரர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. இது ராஜபுத்திரர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால்' எனச் சொல்லி நடந்த அடுத்தடுத்த மகா பஞ்சாயத்துகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உச்ச கட்டமாக காஜியாபாத் தவுலானாவில் நடந்த மகா பஞ்சாயத்தில் 'ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இம்முறை பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கக் கூடாது' என தீர்மானத்தை நிறைவேற்றினர்.நெருக்கடியைச் சமாளிக்க ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்களான முதல்வர் யோகி ஆதித்யநாத், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரையும் கொண்டு சமாதான பேச்சுகளை பா.ஜ., நடத்தியது.அதேபோல சமாஜ்வாதியில் இருந்து மாநிலத்தின் பிரபலமான ராஜபுத்திர முகங்களில் ஒருவரான மதன் சவுகானைக் கட்சிக்குள் கொண்டு வந்ததோடு அவர் வழியாகவும் பேச்சுகளை நடத்தியது. ஆனாலும் மக்களிடம் கீழே ஒருங்கிணைப்பை உண்டாக்க ஜாதி அடையாளத்தை உடைத்து மத அடையாளத்துக்குள் கொண்டு வருவது பா.ஜ.,வுக்கு முக்கியமானதாக இருக்கிறது.மஹாராஷ்டிராவிலும் இது போன்றே மராத்தாக்கள் இடையே ஒரு கசப்பான மனநிலை உருவாகி இருக்கிறது. மாநிலத்தின் 28 சதவீத மக்கள் தொகையை கொண்ட மராத்தாக்களுடைய இட ஒதுக்கீடு விவகாரத்துக்கு பா.ஜ., தீர்வு காணவில்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. கூடவே சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் நடந்த பிளவையும் மராத்தாக்கள் ரசிக்கவில்லை.இதற்கிடையே மஹாராஷ்டிராவின் அம்பேத்கரிய அமைப்புகள் ஒன்றுகூடி 'தலித்துகள் இம்முறை இண்டியா கூட்டணியை ஆதரிப்பது' எனும் முடிவை அறிவித்தன. இம்முறை தனித்துப் போட்டியிடுவது எனும் பிரகாஷ் அம்பேத்கரின் முடிவை அவை புறந்தள்ளின. மாநிலத்தின் மக்கள் தொகையில் 12 சதவீத தலித்துகள் உள்ளனர்.

சனாதன ஆயுதம்

இத்தகைய சூழலில் தான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு ஹிந்து ஓட்டுகளை ஒருங்கிணைக்க சனாதன ஆயுதத்தை பா.ஜ., கையில் எடுத்துள்ளது. ஏற்கனவே ராஜபுத்திரர்கள் மத்தியில் இது ஆரம்பித்து விட்டது. ராஜபுத்திரர்களில் பா.ஜ.,வின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டவர்கள், 'காங்., ஒரு ஹிந்து விரோத கட்சி. சனாதன தர்மத்துக்கு எதிரான காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டோம்' என கூட்டமாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியை பா.ஜ., பின்னின்று நடத்தி வருகிறது.இது தவிர பா.ஜ., நடத்தும் வீதி கூட்டங்களில் தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனும், மாநில அமைச்சருமான உதயநிதி, சனாதனத்தை விமர்சித்துப் பேசியதையும் அக்கட்சியினர் மக்களிடையே பேசுகின்றனர்.இந்நிலையில் தற்போது, ' இண்டியா கூட்டணி வடக்கு,- தெற்கு எனக் கூறி நாட்டைப் பிளவுபடுத்துவதுடன் சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடனும் ஒப்பிடுகின்றனர்' என பிரதமர் மோடி பேசியிருப்பது சனாதான வியூகத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு பா.ஜ., எடுத்துச் செல்லும் என்பதையே காட்டுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

rishi
ஏப் 30, 2024 02:21

NDA தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அண்ணாமலை, குமாரசாமி , அஜித்பவர் ஏக்நாத் , சந்திராபாபு , பவன் , நிதிஸ், யோகி ஆதித்ய நாத் , ராஜ்நாத் போன்ற தலைவர்களை ஒரே ரோடு ஷோவில் பங்கெடுக்க செய்து நாட்டின் ஒற்றுமை வளர்ச்சியை பற்றி மக்களிடம் எடுத்து சொல்லலாம் இந்த தேர்தல் தேச நலனுக்கும் vs தேசவிரோத இண்டி கூட்டணிக்கும் நடக்கும் போர் தேசநலன் காக்க பொது மக்கள் ஒன்றிணைய வேண்டும் இண்டி கூட்டணி ஆட்சியமைத்தல் கச்சத்தீவு போல காஸ்மீர், அருணாச்சலம் நம்மிடம் இருந்து பறிபோகும்


K.n. Dhasarathan
ஏப் 29, 2024 21:35

பாவம் பிரதமர் புலம்ப ஆரம்பித்துவிட்டார், ஏதோதோ பேசுகிறார், ஒன்றுமே எடுபடவில்லை, சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்பார்கள், அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, இனி வரும் திட்டங்கள் பற்றி பேச சரக்கு இல்லை, முதல் கட்ட தேர்தலில் மக்கள் விபரமாக இருக்கவே அவருக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டது, இப்போ சனாதன பேச்சு ஆரம்பித்துவிட்டார், ஆனாலும் ஒன்றும் நடக்காது, பொய்கள் அதிகம் கொடுக்கிற புள்ளி விபரங்கள் அனைத்தும் தவறு, கூட இருக்கும் புள்ளிகள் சரியில்லாதவர்கள், புலம்ப ஆரம்பித்துவிட்டார் பாவம்


venugopal s
ஏப் 29, 2024 16:52

தமிழ்நாடு, கேரளா தேர்தல் முடிந்து விட்டது,இனி வட இந்தியா மட்டும் தான், அங்கு சனாதனம் பேசினால் தானே ஓட்டு கிடைக்கும்!


thangavel
ஏப் 29, 2024 14:57

tholvi bayam mugathile therigiradhu


ராமகிருஷ்ணன்
ஏப் 29, 2024 13:16

வெறும் வாயை வைத்து வளர்ந்த கட்சி திமுக. அதே வாயாலேயே அழியும்.


MADHAVAN
ஏப் 29, 2024 10:38

இப்படி மக்களை ஏமாற்றுவதில் பீ சப்பி கட்சி கில்லாடி,


hari
ஏப் 29, 2024 11:17

ஆமாம், அதனால் புது வகை கோதுமை பீர் அறிமுகம் செய்துள்ளோம்......


KR india
ஏப் 29, 2024 10:35

திரு புர்ஷோத்தம் ரூபாலா அவர்களை பாரதீய ஜனதா கட்சியை விட்டு நீக்க வேண்டும் ஒரு வருடம் கழித்து இந்த பிரச்சினை முடித்த பிறகு, கட்சியின் அடிமட்ட தொண்டராக அவரின் பயணம் ஆரம்பிக்கட்டும் மேல்மட்ட பதவிகள் கொடுக்க கூடாது பாரதிய ஜனதா ஆட்சியின் மீது, முஸ்லிம் பெருமக்களில், பெரும்பான்மையோர் எப்பொழுதுமே அதிருப்தி, ராஜ்புத் சமூகம் பற்றி பாஜக நிர்வாகி புர்ஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், ராஜ்புத் சமூகம் அதிருப்தி


rameshkumar natarajan
ஏப் 29, 2024 10:29

This will backfire bjp When hindus suppressed on the basis of religion, it will never work may be upper community hindus will unite, not all


delhikkaran
ஏப் 29, 2024 09:05

ஒவ்வொரு ஓட்டும் ரொம்ப அவசியம் பிஜேபிக்கு காங்கிரஸ் கட்சியின் அடிச்சு விடு தேர்தல் அறிக்கையை ஹிந்துத்வ ஒருங்கிணைப்பு மட்டுமே முறியடிக்கும்


அப்புசாமி
ஏப் 29, 2024 08:10

வேற வழி?


hari
ஏப் 29, 2024 11:18

டாஸ்மாக் போக ரெண்டு மூணு வழி இருக்கு கோவாலு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை