உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தர்மபுரியில் சவுமியா தோல்விக்கு காரணம் திருமாவளவன்? பா.ம.க.,வினர் குமுறல்

தர்மபுரியில் சவுமியா தோல்விக்கு காரணம் திருமாவளவன்? பா.ம.க.,வினர் குமுறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிதம்பரம் தொகுதியில் வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு கடும் போட்டியை தர பா.ம.க., தவறியதால், அக்கட்சியினர் தர்மபுரியில் எளிதாக பா.ம.க.,வை வீழ்த்தி விட்டதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு முக்கிய காரணம் அரூர் தனி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மணி 85,850 ஓட்டுகளைப் பெற்றார். ஆனால், பா.ம.க.,வுக்கு 46,175 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதுவே பா.ம.க.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lq0b1e78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை சுட்டிக்காட்டியுள்ள வி.சி., தலைவர் திருமாவளவன், 'அரூர் தனி சட்டசபை தொகுதியில் வி.சி.,யின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு விழுந்ததால்தான் தர்மபுரியில் பா.ம.க., தோல்வி அடைந்தது' எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:

தர்மபுரியில், சவுமியா அன்புமணியை வெற்றி பெறச்செய்ய ் கடுமையாக களப்பணி ஆற்றினோம். அதன் பலனாக பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தைப் பிடித்தோம். பாலக்கோடு, மேட்டூரில் தி.மு.க., முந்தினாலும் ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. ஆனால், அரூர் தனி தொகுதியில் தி.மு.க., பெற்றதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்குத்தான் பா.ம.க.,வுக்கு கிடைதத்து. வி.சி.,கட்சியினரின் களப்பணியே இதற்கு காரணம்.திருமாவளவனுடன் நேரடியான மோதல் வேண்டாம் என்பதால்தான், கடந்த 1989 முதல் தொடர்ந்து போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில், கடந்த இரு தேர்தல்களாக பா.ம.க., போட்டியிடவில்லை. சிதம்பரம் தொகுதியில் செல்வாக்குள்ள பா.ம.க., நேரடியாக இம்முறை களம் இறங்கி கடும் நெருக்கடியை திருமாவளவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், தங்கள் தலைவரை கடும் போட்டியில் இருந்து எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, சிதம்பரத்திலேயே இருந்து முழு கவனத்தையும் செலுத்தி இருப்பர். அப்படி செய்யாததால், சிதம்பரம் தொகுதி வி.சி.கட்சியினர் தர்மபுரி தொகுதியில், குறிப்பாக அரூர் சட்டசபை தொகுதியில் கடுமையாக பணியாற்றி சவுமியாவை வீழ்த்தியுள்ளனர். அவர் வெற்றி பெற்றிருந்தால், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும்.இனியாவது, கட்சி தலைமை தேர்தலுக்கு வியூகம் அமைத்து செயல்படுவதற்கு முன் நிறைய யோசித்து செயல்பட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Arunpadayatchichn
ஜூன் 15, 2024 05:26

பூரண மதுவிலக்கை அமல்படுத்த போராடும் கட்சியைத் தவிர்த்து, மதுவிலக்கை பற்றி கவலை படாமல் இருக்கும் பூம் பூம் மாடுகள் போன்ற மக்கள் நலனில் அக்கறை அற்ற கட்சிகளின் வெற்றி, மக்களின் தோல்வி


Arunpadayatchichn
ஜூன் 15, 2024 05:21

வணக்கம், பொது தொகுதியில் ஜெயிப்பது என்பது வேறு, தனி தொகுதியில் ஜெயிப்பது என்பது வேறு, இப்போதைக்கு தமிழ் நாட்டில் ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வெற்றி என்பது மத்திய ஆட்சியில் பா ஜ க இருப்பதனால் பயனற்று போகும் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்


Berlin Princy
ஜூன் 11, 2024 17:35

தன்னலமற்ற தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு... என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤️?


Berlin Princy
ஜூன் 11, 2024 17:31

பிரிச்சு பேசுற.... அது தான் உன்னுடைய தோல்விக்கு காரணம். தன்னலமற்ற தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு.


Rajagopalan R
ஜூன் 13, 2024 22:49

ஜோக்


அரசு
ஜூன் 11, 2024 16:11

ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியுடன் பெட்டி வாங்கிக் கொண்டு கூட்டணி வைத்துக் கொண்டால் இந்த நிலமை தான் ஏற்படும்.


gopi
ஜூன் 12, 2024 05:18

நீ வாங்கி கொடுத்தயா


தமிழ்
ஜூன் 11, 2024 15:55

என்னது, பாமக தேர்தலுக்கு வியூகம் அமைப்பதற்கு முன் யோசித்து செயல்படவேண்டுமா. அவர்கள் எங்கே வியூகம் அமைப்பது.அவர்களுக்கு தேவை பெட்டிகள்தான்


Kumar Kumzi
ஜூன் 11, 2024 12:36

தெருமாவளவனுக்கு ஓட்டு போட்ட ஹிந்து கூமுட்டைங்க நல்ல அனுபவிக்கட்டும்


சோழநாடன்
ஜூன் 11, 2024 11:44

வன்னியர் மிகுதியாக உள்ள சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிகளில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தொல்.திருமாவிற்கு குறைந்த ஓட்டுகளே கிடைத்தன. மற்ற தொகுதிகளில் வாக்குகளை வாங்கி வெற்றிப்பெற்றார். அரியலூர், ஜெயங்கொண்டத்தில் வன்னியர்கள் திருமாவிற்கு ஓட்டுப்போட்டிருந்தால் திருமா 3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார் என எண்ணுவது பேதமை. அதுபோலத்தான் பாமக அறிவுப்பூர்வமாக ஆராயாமல் புத்தி பேதலித்து பேசிக்கொண்டிருக்கின்றது.


Kavikuil
ஜூன் 11, 2024 10:28

பாமக தோற்கடிக்க வேண்டிய கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் சௌமியா அன்புமணி வெற்றிபெற முடியவில்லை. பாமக தொண்டர்கள் அதிமுக கூட்டல் சேர விரும்பினர்.


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 10:14

தீவிர ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி என்று விடியல் மந்திரி சொன்னால் அது சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ மத சார்பின்மை .... திராவிட பகுத்தறிவு ....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி