உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமாவளவன் குற்றச்சாட்டு: ஆளும் கூட்டணியில் உரசல்

திருமாவளவன் குற்றச்சாட்டு: ஆளும் கூட்டணியில் உரசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாஸ்மாக்கில் கள்ளச்சாராயம் கலந்து விற்கப்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டை, ஆளுங்கட்சி தரப்பு ரசிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம் தொடர்பாக, தி.மு.க-., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னையில் இருதினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வி.சி., தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள், காவல் துறையை கண்டித்தும், அரசு நிர்வாகத்தை விமர்சித்தும் பேசினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jky0refg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் பேசுகையில், 'கட்சி கொடி நடுவதற்கு சென்றால் காவல் துறை தடுக்கிறது. 'கள்ளச்சாராயத்தை மட்டும் விற்பனை செய்ய ஏன் தடுக்கவில்லை? காவல் துறைக்கும், உளவுத் துறைக்கும் இது தெரியாமல் இருந்திருக்காது. அவர்களுக்கு தெரிந்தே இப்படிப்பட்ட செயல் நடந்துள்ளது' என்றார்.திருமாவளவன் பேசுகையில், 'பூரண மதுவிலக்கு முடிவை துணிந்து எடுக்க வேண்டும். இந்தியாவே முதல்வர் ஸ்டாலினை திரும்பி பார்க்கும். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களில், சீல் உடைக்கப்பட்டு, அதில் கள்ளச்சாராயம் கலந்து பொய்யான சீல் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது' என்றார்.அரசு மீதான இந்த குற்றச்சாட்டு தான், கூட்டணியில் உரசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோனார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. கூட்டணிக்கான அரசியல் என்பது வேறு; தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு; மக்களுக்கான அரசியல் என்பது வேறு.மக்கள் நலனுக்கான கோரிக்கையை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக, அ.தி.மு.க.,வினர் போல கருப்பு சட்டை அணிந்து, சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தும், கவர்னரை சந்தித்தும் எதிர்ப்பு அரசியல் நடத்தவில்லை.ஆளும் கூட்டணி கட்சி என்ற முறையில் மதுவிலக்கின் அவசியத்தை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதில் சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

gautam arulprakasam
ஜூன் 29, 2024 00:39

ஹ..ஹ....ஹா.....


Ethiraj
ஜூன் 28, 2024 07:03

Poor Thiruma he is in wrong company


Anantharaman Srinivasan
ஜூன் 28, 2024 01:00

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலோனார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். என்பதால் தான் திருமா .இந்த புலம்பு புலம்புகிறார்..


RajK
ஜூன் 27, 2024 20:46

திருமா ஒன்றும் ஊபீஸோ அல்லது அரசு ஊழியரோ இல்லை, திமுகாவுக்கு நிபந்தனைகள் இல்லாமல் முட்டு கொடுப்பதற்கு. விசிக தற்போது மாநில கட்சி ஆகிவிட்டார்கள். அடுத்த முறை சட்டசபையில் ஆட்சியில் பங்கு கேட்க தேவையான முயற்சி எடுப்பார்கள். கூட்டணி யாராக இருந்தால் என்ன?


Ethiraj
ஜூன் 28, 2024 07:05

He deserves Deputy CM.POST


ராது
ஜூன் 27, 2024 19:06

பாவம் அணைப்பதா தன் சகோதரர்களை - அறைவதா அரசியல் கூட்டாளிகளை - சிதம்பர ரகசியம் எப்போது வெளிவரும் திருமாளுக்கே வெளிச்சம்


lana
ஜூன் 27, 2024 18:08

அப்படி மக்களை காக்க வேண்டும் என்று நினைத்தால் தப்பு செய்த கட்சி கூட எதுக்கு கூட்டணி. செத்து போன வர்களில் 80% பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள். உங்க மக்களின் சாவுக்கு கூட உண்மையான போராட்டம் நடத்த முடியாது. காசு அவ்வளவு முக்கியம்


ராது
ஜூன் 27, 2024 19:08

10 லட்சம் விகேசி கொடுக்குமா கள்ளஞ் சாராயம் குடும்பங்கள் குடிக்காவிட்டால் - பணம் பந்தியிலே பிணம் குப்பையிலே இதை பார்த்தும் அறிந்தும் கேட்காதவன் நடு ரோட்டிலே


Raj
ஜூன் 27, 2024 17:45

வெரி குட்


theruvasagan
ஜூன் 27, 2024 17:16

வடிவேலு தனக்கு கடன் கொடுத்தவன மிரட்டி ஆவேசமா பேசுகிற மாதிரி ஒரு சீன் போடுவாரே. தூரத்திலிருந்து பார்க்கிற சினேகிதர்களுக்கு அவர் டெர்ரரா பேசற மதிரி தெரியும்.


Karthikeyan
ஜூன் 27, 2024 14:39

உங்க எம் எல் ஏ க்களை சட்டசபையில கள்ளச்சாராய மரணம் பற்றி பேசச் சொல்லுங்க பார்ப்போம்...அதிமுக சாராய மரணம் குறித்து பேசச் சொன்னதால்தான்... சபாநாயகர் அவர்களை அவையை வெளியேற்றிவிட்டார்... அவர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.


raam
ஜூன் 27, 2024 13:02

உங்க சுடாலின் சொன்னாரா.. நீ என்னை எதிர்கிறது போலே எதிர்.. நானும் உன் கட்சி மீது நடவடிக்கை எடுப்பது போலே எடுப்பேன்னு சொல்லி வச்சு விளையாட்டு காட்டுரீங்கன்னு தெரியுதே.. இந்த வாயை சட்டசபையிலே திறக்க உங்களுக்கு திரானி இருக்கா.. அது எப்படி இருக்கும்... உங்களுக்கு சிஞ்சா ஜால்ரா அடிக்கமட்டும் தான் தெரியும்.. உங்களாலே அது மட்டூம் தான் முடியும்.. இந்த லட்சணத்துலே .. எதுத்து கேள்வி கேட்டானுங்களாம்...


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை