உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் கல்தா

துணை முதல்வராகிறார் உதயநிதி?: சில அமைச்சர்களுக்கும் கல்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்து, இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும்; லோக்சபா தேர்தலில் கட்சித் தலைமை எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாத சில அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும், தி.மு.க., தலைமை ஆலோசித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜன., 21ல், சேலத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. லோக்சபா தேர்தலுக்கு முன், துணை முதல்வர் பதவி வழங்கினால், அதுவே, எதிர்கட்சிகளின் வாரிசு அரசியல் பிரசாரத்திற்கு வழிவகுத்துவிடும் என்று, மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.இதனால், 'துணை முதல்வர் பதவி என்பது வதந்தி' என்று, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, 'முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம்; எனக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து, முதல்வர் தான் முடிவு செய்வார்' என்று, உதயநிதி கூறினார்.லோக்சபா தேர்தலுக்கு முன், சனாதனம் விவகாரம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசினார். இதற்கு, வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர்மீது, சில மாநிலங்களின் வழக்குகள் பதிவானது. லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுதும் உதயநிதி சுற்றுபயணம் செய்து, தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தி.மு.க., கூட்டணி கட்சிகள், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையவில்லை. கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், உடனே உதயநிதியை துணை முதல்வராக்க, ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். சனாதனம் தொடர்பான வழக்குகளில், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததால், துணை முதல்வர் பதவியை தர, தி.மு.க., தலைமை முன்வரவில்லை.முதல்வர் ஸ்டாலின் இம்மாதம் இறுதி வாரத்தில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு, அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், முதல்வர் பணிகளை கவனிக்கும்விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில், எந்தந்த தொகுதிகளில் தி.மு.க.,வுக்கு ஓட்டு சதவீதம் குறைந்ததோ; அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் தி.மு.க., தலைமை ஆலோசித்துள்ளது. சில மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்பட்சத்தில், அவர்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரும். மேலும், மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மாற்றம்; இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

தமிழ் மைந்தன்
ஜூலை 10, 2024 12:34

நேரு போனால் ஆட்சியையும் குளோஸ்


sankaranarayanan
ஜூலை 09, 2024 00:41

மாமகுடம் அணிந்து முடிசூடாமன்னர்கள் காலம் சென்று இப்போது மன்னர்கள் ஆட்சி வாரிசு ஆட்சி ஆட்சியாளத்துடங்கிவிட்டது இதுதான் ஜநாயகமா? மகுடாபிஷகம் நடக்கும் தினம் வெகு விரைவில் நிர்ணயிக்கப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெறும் அரங்கு நேரம் முக்கியஸ்தர்கள் கூடுவது அறிவிக்கப்படும்


S. Narayanan
ஜூலை 08, 2024 21:51

கள்ள சாராயம் காய்ச்சுவது பற்றி முதல்வருக்கு தெரியாது என்கிறார்கள். இப்படி பல முக்கிய விஷயங்கள் முதல்வருக்கு தெரியாத போது துணை முதல்வருக்கு எந்த விஷயமும் தெரிய போவது இல்லை. பின் எதற்கு துணை முதல்வர்.


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூலை 08, 2024 19:04

இதில் முதலில் பலியாகப் போவது அமைச்சர் நேருதான் அடுத்து துரை முருகனாகவும் இருக்கலாம்


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 18:50

அப்பாவுக்கு பதிலாக இவர் மதுவிலக்கு , நீட் விலக்குக்கு முதல் கையெழுத்தை போடுவார்.


R.P.Anand
ஜூலை 08, 2024 17:07

50 ஆண்டு கட்சி வளர்தனுங்க . தகுதி உள்ள ஒருத்தன் இன்னுமா வளர்க்க முடியல.


தமிழ் மைந்தன்
ஜூலை 10, 2024 12:35

கொத்தடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் பழக்கம் திராவிட மாடலில் இல்லை


Ramesh Sargam
ஜூலை 08, 2024 16:42

என்ன பதவி?


kulandai kannan
ஜூலை 08, 2024 16:09

விபரீத புத்தி.


subramanian
ஜூலை 08, 2024 15:51

துணை முதல்வர் பண பரிமாற்ற வழக்கில் கைது.


sridhar
ஜூலை 08, 2024 12:50

// முதல்வரின் பணிகளை கவனிக்க // அப்படி என்ன பணிகள் இருக்கு முதல்வருக்கு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை