உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுக்குமாடி திட்டங்களில் 3,000 பத்திரங்கள் காத்திருப்பு

அடுக்குமாடி திட்டங்களில் 3,000 பத்திரங்கள் காத்திருப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடைபிடிப்பதில் தெளிவில்லாத சூழல் நிலவுவதால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு விற்பனை செய்வதற்கான, 3,000 பத்திரங்கள் பதிவுக்கு காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 2012ல் வழிகாட்டி மதிப்புகள் சீரமைக்கப்பட்டன. இதில் பெரும்பாலான மதிப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2017ல், 33 சதவீதம் குறைக்கப்பட்டது.இந்த மதிப்பு அடிப்படையில் சொத்து பரிவர்த்தனை பத்திரப்பதிவு நடந்து வந்தது. இந்நிலையில், 2023ஏப்ரல், 1 முதல், 2012ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகள் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்தது.இதை எதிர்த்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை மீண்டும் அமல்படுத்தும் சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து, 2017 நிலவரப்படியான வழிகாட்டி மதிப்பை பதிவுத்துறை கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை மவுனமாக இருப்பது நல்லதல்ல. இதனால், பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன.குறிப்பாக, அடுக்கமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனை தொடர்பான, 3,000 பத்திரங்கள் காத்திருக்கின்றன. எந்த வழிகாட்டி மதிப்பை ஏற்பது என்பது தெளிவானால், இந்த பத்திரங்கள் அனைத்தும் பதிவுக்கு வரும்.இதே போன்று, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றில் ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி நில ஒதுக்கீட்டுக்கான கட்டணம், கூடுதல் தள பரப்பு அனுமதிக்கான பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணங்கள் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பதிவுத்துறை அமைச்சர் இதில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.லோக்சபாவுக்கான தேர்தல் வரவுள்ள பின்னணியில், வழிகாட்டி மதிப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

மணியன்
ஜன 25, 2024 18:13

இந்த ஆட்சியில் தாங்க முடியாத,மனசாட்சியற்ற லஞ்சம்,குறிப்பாக பதிவுத்துறையில் மக்கள் விதியை நினைத்து நொந்து போயுள்ளனர்.


Ramesh Sargam
ஜன 25, 2024 07:23

தெளிவுள்ள சூழல் நிலவினால் கூட என்ன பெரிய மாற்றம் இருக்கப்போகிறது. லஞ்சம் இல்லாமல் ஒரு செங்கல்லும் வைக்கமுடியாது. தெலுங்கானாவில் ரியல் எஸ்டே் ஒழுங்குமுறை ஆணைய செயலராக இருப்பவர் சிவபாலகிருஷ்ணன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 100 கோடி வரை லஞ்சம் பணம் சிக்கியது என்றனர். அவர் பெயர்தான் சிவபாலகிருஷ்ணன். ஆஹா, அம்சமான கடவுள் பெயர். செய்தது அவ்வளவும் ஊழல்.


Kundalakesi
ஜன 25, 2024 07:06

திறனில்லாத ஆட்சியில் எல்லோரும் அவஸ்தை பட வேண்டும்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ