உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர்கள் கவனமாக இருங்கள்; மத்திய அரசு கண்காணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

அமைச்சர்கள் கவனமாக இருங்கள்; மத்திய அரசு கண்காணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை கோட்டையில், நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. தமிழகத்துக்கு தொழில் துவங்க, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு 27ல் முதல்வர் செல்கிறார். அது தொடர்பான நிறைய விஷயங்கள், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளன.

அமைச்சர்களிடம் முதல்வர் பேசியது குறித்து, கோட்டை வட்டாரம் கூறியதாவது:

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான், அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறேன். பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால், இம்முறை கூடுதல் அளவுக்கு தொழில் முதலீடுகள் கட்டாயம் தமிழகத்துக்கு ஈர்க்கப்படும். எதிர்க்கட்சியினர் சொல்வது போல, தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான மோசமான சூழல் இல்லை என்பதை, அமெரிக்காவில் இருக்கும் தொழில் அதிபர்கள் உணர்ந்துள்ளனர். இம்முறை கூடுதல் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதும், அதை வைத்து தமிழகத்தில் நாம் அரசியல் செய்வோம். அதுவரை, இதுகுறித்து அமைச்சர்கள் யாரும் அவசரப்பட்டு, எதையும் மக்கள் மத்தியில் பேச வேண்டாம்; அமைதியாகவே இருங்கள். நான் இங்கு இல்லை என்றதும், அமைச்சர்கள் தங்கள் செயல்பாடுகளை தாறுமாறாக அமைத்துக் கொள்ளக் கூடாது. இங்கு இல்லை என்றாலும், ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்தில் தான் என்னுடைய எண்ணமும், கண்களும் இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் அங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டிருப்பேன். எல்லா தகவல்களும் நொடிக்கு நொடி எனக்கு வந்து சேர்வது போல, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு எந்தத் தவறு நடந்தாலும், அது எனக்கு உடனடியாக கொண்டு வரப்பட்டு விடும். அதனால், எல்லாரும் எச்சரிக்கையோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும். எனக்கு வந்திருக்கும் உளவுத் தகவல் அடிப்படையில் சில விஷயங்களை வெளிப்படையாகவே சொல்கிறேன். ஏற்கனவே மத்திய உளவு அமைப்புகள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி, நம் எல்லாரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. நான் இங்கு இல்லாத சூழலிலும், கண்காணிப்புகள் தொடரும். அமைச்சர்கள் ஏடாகூடமாக ஏதாவது செய்து, மத்திய அரசு அதன் வாயிலாக நடவடிக்கை எடுத்தால், அது ஒட்டுமொத்த தி.மு.க., ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொருவரும் நுாறு மடங்கு கவனமாக செயல்பட வேண்டும். செயல்பாட்டில் எந்த சந்தேகம் என்றாலும், எந்த நேரம் என்றாலும் என்னை உரியவர்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். சில மூத்த அமைச்சர்கள், தனிப்பட்ட முறையில் என்னை அணுகி, துணை முதல்வர் அறிவிப்பு குறித்துப் பேசினர். அவர்களுடைய எண்ணமும், பேரன்பும் மதிக்கத்தக்கது. ஆனால், அமைச்சர் உதயநிதி உடனடியாக அப்பொறுப்பை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. கூடுதல் அனுபவம் பெற்ற பின், பொறுப்பை ஏற்பதாக சொல்லி விட்டதால், சில காலம் பொறுத்து எதையும் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

MADHAVAN
ஆக 17, 2024 16:31

நீங்களா இப்படி ஒரு செய்தியை போட்டு சந்தோசப்பட வேண்டியதுதான்,


R.MURALIKRISHNAN
ஆக 15, 2024 21:53

நிர்வாகம் பொறுப்பில்லை சாமியோவ்...


Jagan (Proud Sangi)
ஆக 15, 2024 18:32

எல்லாம் AI தொழிநுட்பத்தில் செயலி உள்ளது. கமிஷன் சரியாக வந்துவிட வேண்டும் என்று பொருள் கொண்டால் கழகம் பொறுப்பாகாது.


ram
ஆக 15, 2024 18:20

நல்ல அருமையான எச்சரிக்கைதான்... கேவலமா இல்லை..


venugopal s
ஆக 15, 2024 17:04

கடைசி வரி தான் தமாசு, இவ்வாறு அவர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதையும் ஒரு செய்தி என்று போட்டு அதையும் உண்மை என்று நம்பி பத்து பேர் கமெண்ட் போடுகிறார்கள். வேலையில்லா பட்டதாரிகள்!


Chandran,Ooty
ஆக 15, 2024 19:28

எது எதற்குதான் முட்டு கொடுக்கணும்னு ஒரு விவஸ்த்தையே கிடையாதா? நானும் எத்தனையோ திமுக அடிமைகளை பார்த்திருக்கேன் ஆனால் உம்மை போல ஒரு அறிவாலய கொத்தடிமையை பார்த்ததே இல்லை...


theruvasagan
ஆக 15, 2024 16:03

தொட்டுப்பார். சீண்டிப்பார்னு சவால் விடலயே. ஏதோ எங்கியோ எக்கு தப்பா மாட்டிகிடுச்சு போல.


theruvasagan
ஆக 15, 2024 16:00

புள்ள நேத்திக்கு வரைக்கும் நல்லாத்தானே இருந்துச்சு. ராத்திரி எத பாத்து பயந்திச்சோ தெரியலையே.


thamizhagam
ஆக 15, 2024 14:54

Aama Kollai paathu adinga


aaruthirumalai
ஆக 15, 2024 13:51

இந்த தலைப்பு பாத்தா சிரிப்பு வருதா வரலயா. கவனமாக தப்ப செய்யனும்.


Sridhar
ஆக 15, 2024 13:38

என்னைய்யா இது, தன்னோட அமைச்சரவை பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறாரு மத்திய உளவுத்துறை கண்காணிப்புன்னா அப்போ எதோ சீரியசான விஷயங்கள் நடந்துக்கிட்டிருக்கோ? ஆகமொத்தம் எல்லாரும் பயத்துல இருக்கானுங்கங்கற விவரம் மட்டும் தெளிவா தெரியுது.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை