மேலும் செய்திகள்
அரசு பணியாளர்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க.,: பாஜக
20 hour(s) ago | 12
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிராக, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய, மாவட்டச்செயலர் ஜெயபாலன், 'உங்கள் ஓட்டுகளை பறிக்க மோடி துடிக்கிறார். அவர் இன்னொரு நரகாசுரன். அவரை தீர்த்துக் கட்டினால் தான், தமிழகம் நன்றாக இருக்கும்' என, மிகவும் அவதுாறாக பேசியுள்ளார். 'அவரை கைது செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். தென்காசி பா.ஜ., மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கையில், 'பிரதமரை அவதுாறாகப் பேசிய ஜெயபாலனுக்கு, சட்டப்படி நிச்சயம் தண்டனை பெற்று தருவோம்' எனக் கூறியுள்ளார். தென்காசி போலீஸ் நிலையத்தில், ஜெயபாலனை கைது செய்யக்கோரி, பா.ஜ., நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். ஜெயபாலனின் சொந்த ஊரான சுரண்டையில், அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்து, உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், கடையம் போலீஸ் நிலையத்தில், ஜெயபாலன் மீது புகார் அளித்துள்ளார். பா.ஜ., மாநிலக் குழு உறுப்பினர் பாரதி கண்ணன் உட்பட பலர், ஜெயபாலன் மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதற்கிடையில், ஜெயபாலன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன், சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கரகாட்டம் ஆடும் இரு பெண்களிடம், 'வாட்ஸ் -ஆப்' வழியே, ஆபாசமாக ஜெயபாலன் பேசியது குறித்து, கட்சி தலைமைக்கு, புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் பகுதியில் வசித்த பெண் ஒருவருடன் இருந்த புகைப்படம், வீடியோவை கேட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம், மாவட்டச்செயலர் பேரம் பேசிய ஆடியோவை, கட்சி தலைமைக்கு உளவுத்துறை போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். தென்காசி தி.மு.க., அலுவலகத்தில், இரவு 7:00 மணிக்கு மேல், விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது குறித்து, கட்சி தலைமைக்கு புகார் மனு அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது, பிரதமரை அவதுாறாக பேசியதையும், பெண் பாலியல் குற்றச்சாட்டு குறித்தும், சமூக வலைதளங்கள் வாயிலாக, அ.தி.மு.க., - பா.ஜ., நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் - .
20 hour(s) ago | 12