தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,; காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், காங்கிரசில் உள்ள வன்னியர் சமுதாய நிர்வாகிகளுக்கு, 'சீட்'கள் கிடைக்காது என்பதால், அக்கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சென்னை தலைமை செயலகத்தில், கடந்த 29ல், முதல்வர் ஸ்டாலினை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து பேசினார். இருவரது சந்திப்பும், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுவதற்கான அச்சாரம் என, காங்கிரசார் சந்தேகிக்கின்றனர்.லோக்சபா தேர்தலில், வன்னியர் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளான கடலுார், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஆரணி போன்ற தொகுதிகளில், இம்முறை காங்., போட்டியிட விரும்புகிறது.தற்போது, கிருஷ்ணகிரி தொகுதியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணு பிரசாத்தும் எம்.பி.,யாக உள்ளனர். இந்த இரு தொகுதிகளை தவிர, வன்னியர் சமுதாயத்திற்கு செல்வாக்கு உள்ள சில தொகுதிகளையும் கூடுதலாக பெற காங்கிரசில் இருக்கும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றால், அக்கட்சியும் வன்னியர் சமுதாயத்திற்கு சாதகமான தொகுதிகளை கேட்கும் என்பதால், காங்கிரசில் உள்ள வன்னியர் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -