உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பா.ஜ.,வை விடாதீங்க: பழனிசாமி கட்டளை

பா.ஜ.,வை விடாதீங்க: பழனிசாமி கட்டளை

பா.ஜ., - அ.தி.மு.க., உறவு மறைமுகமாக தொடர்வதாக, தி.மு.க., குற்றம் சாட்டி வருகிறது. அந்த பேச்சுக்கு உரமூட்டும் விதமாக, அ.தி.மு.க.,வை விமர்சிக்காமல், பா.ஜ., மவுனம் சாதிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.இதற்காக, தி.மு.க., வை விமர்சிப்பதுபோல், பா.ஜ.,வையும், மத்திய பா.ஜ., அரசையும் கடுமையாக விமர்சிக்கும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.கூடவே, சென்னையில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசுகையில், மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார்.அதன் தொடர்ச்சியாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலர் முனுசாமி, அமைப்புச் செயலர் ஜெயகுமார் ஆகியோர், பா.ஜ.,வை விமர்சிக்க துவங்கி உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை