உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதத்தை பார்க்காதீங்க, கட்சியை பாருங்கள்

மதத்தை பார்க்காதீங்க, கட்சியை பாருங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில் : கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், அந்த தொகுதியை தக்க வைக்க கிறிஸ்துவ அமைப்புகளிடம் மன்றாடி வருகிறது. இங்கு நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஹிந்து நாடார் சமூகத்தில் காங்., சார்பில் காமராஜர், தாணுலிங்க நாடார், குமரி அனந்தன், வசந்தகுமார், விஜய் வசந்த் பா.ஜ., சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.கிறிஸ்துவ நாடார் சமூகத்தில் நேசமணி, டென்னிஸ், பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றுள்ளனர். 1980 முதல் 98 வரை நடைபெற்ற ஆறு தேர்தல்களில் தொடர்ச்சியாக காங்., மற்றும் த.மா.கா., சார்பில் டென்னிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடந்த 2019 தேர்தலில் மேலிட செல்வாக்குடன் களம் இறக்கப்பட்ட வசந்தகுமாருக்கு ஆதரவு அளிப்பதில் கிறிஸ்துவ அமைப்புகள் ஆரம்பத்தில் சுணக்கம் காட்டினாலும் பின் முழுவீச்சில் களம் இறங்கின. வசந்தகுமார் மறைவுக்கு பின், அவரது மகன் விஜய்வசந்த் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அடுத்த பொது தேர்தலில் கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேலை செய்தனர்.ஆனால், வரும் தேர்தலில் விஜய்வசந்த் தான் மீண்டும் போட்டியிடுவார் என்பது அனேகமாக உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் பங்கு தந்தையர்களும், கிறிஸ்துவ சமூக அமைப்புகளும் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தி வருகின்றன.இதனால் பதறிய விஜய்வசந்த் மற்றும் காங்., நிர்வாகிகள் ஒவ்வொரு ஊராகச் சென்று, அங்கிருக்கும் பங்கு தந்தையர்களை சந்தித்து பேசி வருகின்றனர். 'வேட்பாளர்களை பார்க்காதீர்கள், மத்தியில் சோனியாவை பாருங்கள், அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டாமா...' என்று பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை