மேலும் செய்திகள்
நெருக்கடி ஏற்படுத்திய தம்பிதுரை; பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி
23 hour(s) ago | 23
புதிய கட்சி துவங்க திட்டம்; பன்னீர்செல்வம் டில்லி பயணம்
03-Dec-2025 | 14
தே.மு.தி.க.,வை இழுக்கும் பா.ஜ., முயற்சி வெற்றி?
03-Dec-2025 | 7
'என் மனைவி, பிள்ளைகள் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடுவர்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம், கூட்டணி தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், அக்கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி., பீட்டர் அல்போன்ஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், பங்கேற்றனர். இக்கூட்டத்தில், காங்கிரசார் பேசியுள்ளதாவது: கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 63 தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைத்தன. தற்போது, அதை விட கூடுதல் தொகுதிகளை வாங்க வேண்டும். தொண்டர்கள், மக்கள் மனநிலை மற்றும் கள நிலவரம் அறிந்து, நல்ல முடிவு எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களிடத்தில் நற்பெயர் உள்ளது. ஆனால், அவர் சொல்வதை, அதிகாரிகள் தான் கேட்டு செயல்படுத்த முன்வருவதில்லை. அமைச்சர்கள் யாரும் காங்கிரசாரை மதிப்பதில்லை. தி.மு.க.,விடம் நாம் அடிமையாக இருந்து விடக்கூடாது. மக்கள் பிரச்னைகளுக்காக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட போராடுகின்றன. காங்கிரஸ் ஏன் போராட முன்வரவில்லை என மக்கள் கேட்கின்றனர். தமிழகத்தில் காங்கிரஸ் பெறும் வெற்றி, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கூட்டணி அமைய வேண்டும். எங்கள் வீடுகளில் கூட மனைவி, பிள்ளைகள் எல்லாம், விஜய் கட்சிக்கு தான் ஓட்டு போடப் போவதாக கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் பேசியுள்ளதாக தெரிகிறது. - நமது நிருபர் -
23 hour(s) ago | 23
03-Dec-2025 | 14
03-Dec-2025 | 7