உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் கஸ்துாரி ஐக்கியம்?

பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் கஸ்துாரி ஐக்கியம்?

பா.ஜ.,வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார். அதே நேரத்தில், பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ., வில் நடிகை கஸ்துாரி இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.நடிகை கவுதமி, 1997ல் பா.ஜ., வில் இணைந்தார். இளைஞரணி துணை தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். தன் சொத்து தொடர்பான பிரச்னையில், பா.ஜ., தனக்கு உதவவில்லை எனக்கூறி, கடந்த ஆண்டு அக்டோபரில், பா.ஜ.,வில் இருந்து விலகினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rn7nity9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எந்த கட்சியிலும் சேராமல் இருந்த அவர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் ஏற்பாட்டில், சமீபத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கவுதமிக்கு கொள்கை பரப்பு இணை செயலர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனால், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.சுற்றுப்பயணத்தின் போது, அவரது தேர்தல் பிரசாரத்திற்கு பதிலடி தரும் வகையில் நடிகை கஸ்துாரியை, பா.ஜ.,வில் இணைக்கும் பேச்சு துவக்கப்பட்டுள்ளது.வரும் 27ம்தேதி, பல்லடத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.அந்த பொதுக்கூட்டத்தை, தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு நேற்று முன்தினம் கால்கோள் விழாவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.அன்று, மாற்று கட்சிகளிலிருந்து முக்கிய நிர்வாகிகள், குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களும், பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜ.,வில் இணைகின்றனர். அவர்களின் வரிசையில், கஸ்துாரியும் பா.ஜ.,வில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நல்ல முடிவு எடுப்பேன்

ஹிந்து மதத்தை ஆதரிக்கும் சிந்தனை உடைய நான், ஹிந்து மதத்திற்கு ஆதரவாக நடக்கும் கூட்டங்களில் கருத்தரங்குகளில், மாநாடுகளில் பங்கேற்று பேசியிருக்கிறேன். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்ற மூன்று, நான்கு கூட்டங்களில் நானும் பங்கேற்றுள்ளேன். கோவையில் ஓடும் ஆறுகள் மாசுபடிவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடத்திய கூட்டத்தில், அண்ணாமலையும், நானும் பங்கேற்றுள்ளோம். சென்னையில் அண்ணாமலையுடன் நான் பங்கேற்ற நிகழ்ச்சியை பெப்சி சிவா ஏற்பாடு செய்திருந்தார். கண்டிப்பாக, தீவிர அரசியலில் ஈடுபடுவேன். சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுப்பேன்.- நடிகை கஸ்துாரி-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

g.s,rajan
பிப் 17, 2024 23:04

பி.ஜே.பி சினிமா நட்சத்திரங்களால் ஒளிர்கிறது.....


Easwar Kamal
பிப் 17, 2024 22:12

idhu vaya vachukittu summa irukadhae. idhu andha gayathriku akkavaache. idhu ethanai nalayku therumnu pappom/


Anantharaman Srinivasan
பிப் 17, 2024 21:14

அம்மா..கஸ்தூரி பார்த்து பார்த்து செய்யுங்க. ராணி வேஷம் போட்டா நடிக்கணும். நாய் வேஷம் போட்டா குரைக்கணும் .. கட்சியில் அண்ணாமலைக்கு அடங்கி நடக்கணும்.


sankaranarayanan
பிப் 17, 2024 21:07

இவர்கள் சினிமா உலகை ஒரு வழிக்கு கொண்டுவந்ததைப்போன்று தமிழக அரசியலையும் ஒரு வழிக்கு கொண்டுவந்தது விடுவாரக்ள் இங்கு நடக்கும் அரசியல் உண்மை சினிமாவில் நடக்கும் அரசியல் நடிப்பு வித்தியாசம் தெரிந்து இவர்கள் இணைந்தால் போதும் மக்கள் காப்பாற்றப்படுவார்கள்


Godfather_Senior
பிப் 17, 2024 20:32

உங்கள் வரவு தமிழ் நாட்டிற்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும் என்றால், அரசியலில் தைரியமாக நுழையலாம். பதவி சுகம் வேண்டுவோர் பிஜேபி பக்கம் வராமல் இருப்பதே நன்மை . கடின உழைப்பு, தேசியவாதம், மற்றும் பலன் எதிர்பாராமை இம்மூன்றும் உங்களை உயர்விக்கும் .


Gopalkrishnan GS Secunderabad
பிப் 17, 2024 18:29

கவுதமி இருப்பது ஆண்டுகளுக்கு முன் இணைந்தது எனக்கு புதுச்செய்தி. எண்பதுகளின் இறுதியிலிருந்து நான் பாஜக வாக்காளர் இன்று வரை. இவர் ஏதோ இன்று வந்ததுபோல்தான் தெரிகிறது.


Indian
பிப் 17, 2024 18:11

நமிழ் நாட்டின் அனைத்து பெண்களின் வாக்கும் கஸ்தூரியின் தயவால் பாஜவுக்கு வரப்போகுதுங்கோய். நாற்பதும் நமதே


Chennaivaasi
பிப் 17, 2024 18:00

கஸ்துரி மிக அதிக புத்திசாலி. இன்று தமிழ்நாட்டில் உள்ள தி மு க அண்ணா தி மு க மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள தலைவர்களை விட கெட்டிக்காரர். விஷயம் தெரிந்தவர். நன்கு படித்தவர். அவர் ப ஜ க வில் சேர்ந்தால் அந்த கட்சிக்கு நலம்.


Raj
பிப் 17, 2024 17:19

எல்லாம் ஆடி ஓயிஞ்ச பிறகு, சினிமா துறையில் காலசீட்டு இல்லைன்னு தெரியும், அடுத்த காசு துறை அரசியல், நடிகைகள் வந்த கட்சி எல்லாம் ஊத்தி மூடிப்போச்சு, அந்த வரிசையில் இதுவும் ஒன்று.,.............


Seshan Thirumaliruncholai
பிப் 17, 2024 13:49

நடிகை கஸ்தூரி ஒரு நல்ல தொலைக்காட்சி விவாத மேடை கழுந்துரையாடல் பேச்சாளர்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ