உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பார்லிமென்டில் பதிலடி தர தயார் நிலையில் அமைச்சர்கள் நிர்மலா, முருகன்

பார்லிமென்டில் பதிலடி தர தயார் நிலையில் அமைச்சர்கள் நிர்மலா, முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லோக்சபாவில் பா.ஜ.,விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை; தோழமை கட்சிகளின் தயவுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த பார்லிமென்டில் இருந்தது போல, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்க மாட்டார்கள். இனி பார்லிமென்ட் கூட்டத்தொடர் கூச்சலும், குழப்பமாகவும் இருக்கும் என்பதை, நடந்து முடிந்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் உணர்த்தி விட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8u47x5u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சபையில் தி.மு.க.,வின் எதிர்ப்பும் கடுமையாக இருக்கும் என்பது எம்.பி.,க்களின் பேச்சிலிருந்தே தெரிந்து விட்டது. இந்நிலையில், எதையும் சமாளிக்க பா.ஜ.,வில் திட்டங்கள் தயாராகி வருகின்றன.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்த வி.சி., கட்சி தலைவர் தொல் திருமாவளவன், 'நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, லோக்சபாவில் பேசினார். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'லோக்சபாவுக்கு வந்து மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். ஏனெனில் போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது...' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் கூச்சலிட்டனர். ஆனால், பா.ஜ., சீனியர் தலைவர்கள், 'சரியான பதிலடி...' என, நிர்மலாவை பாராட்டினர்.'இனி பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் எது குறித்து பேசினாலும், அதற்கு தக்க பதிலடி தர, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை அமைச்சர் எல்.முருகனும் தயாராக இருக்க வேண்டும்' என, கட்சி தலைமை சொல்லியிருக்கிறதாம்.அதற்காகவே, 'தமிழகத்தில் என்ன நடக்கிறது; அங்கு நிலவும் பிரச்னைகள் என்னென்ன?' என்பது குறித்த அனைத்தையும் இந்த இரு அமைச்சர்களும் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GUNA SEKARAN
ஜூலை 08, 2024 15:50

ராகுல் எங்கே பேசினார். முறைப்பாக நின்று கொண்டுறு பொய்களை வீசினார், நடித்தார்... பொறுப்பு என்றால் என்னவென்றே தெரியாதவர்


Saai Sundharamurthy AVK
ஜூலை 07, 2024 18:33

ஒவ்வொரு கூட்டத் தொடர் நடப்பதற்கு முன்பும் அல்லது ஒவ்வொரு மாநில தேர்தல்கள் நடப்பதற்கு முன்பும் எதிர்க்கட்சிகள் ஏதாவது போராட்டம், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இந்துக்களை உயிர்பலி ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. அதே போல, பாகிஸ்தான், சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லீம்கள் இறப்பு சம்பவம் போன்ற சில சம்பவங்களைப் பார்த்தால், அதற்கு ஈடாக சில சம்பவங்கள் நம் நாட்டிலும் இந்துக்கள் மீது நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது சந்தேகம் வருகிறது.


ராமகிருஷ்ணன்
ஜூலை 07, 2024 04:27

இந்த ஒரு காரணத்திற்காக அண்ணாமலை வெற்றி பெற்று இருக்கலாம். பதிலடிகள் வலுவாக இருக்கும். திமுகவினர் பேய் முழி முழிப்பதை பார்த்திருக்கலாம்


Siva salapathy
ஜூலை 07, 2024 15:49

பேய் முழி முழிப்பது என்றால் ராகுல் பேசும்போது ஜி முழித்த்தாரே அதுதானே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை