உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பத்தாவது தோல்வியால் இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி

பத்தாவது தோல்வியால் இ.பி.எஸ்.,க்கு நெருக்கடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அக்கட்சி நிலை என்னாகும் என்ற கேள்வியும் அவர்கள் இடையே எழுந்துள்ளது.தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பின், 2017 பிப்ரவரியில், இடைப்பாடி தொகுதி, எம்.எல்.ஏ.,வான பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உடன் இணைந்து, 2017 ஆகஸ்டில் கட்சியின் இணை பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றார்.இவர்கள் தலைமையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன், 40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், 2ம் இடத்தையே பிடித்தார். சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார்.தொடர்ந்து காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகள், லோக்சபா தொகுதிகளுக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. அதில், பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.,யாக வெற்றி பெற்றார். சட்டசபை இடைத்தேர்தலில், 22 தொகுதிகளில், தி.மு.க., 13, அ.தி.மு.க., 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதுபோல, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை, ஸ்டாலினிடம் பறிகொடுத்தனர். தொடர்ந்து நடந்த, ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களிலும், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, 2022ல் இடைக்கால பொதுச்செயலர், தொடர்ந்து பொதுச்செயலராக, பழனிசாமி உருவெடுத்தார். இவரது தலைமையில், அ.தி.மு.க., ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், 66,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு, 'பல கட்சிகள் கூட்டணிக்குள் வரும்' என்ற எண்ணத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணியை, பழனிசாமி முறித்துக்கொண்டார். ஆனாலும், தே.மு.தி.க.,வை தவிர வேறு கட்சிகள் கூட்டணியில் சேரவில்லை. தற்போது தேர்தல் முடிவு வெளி வந்த நிலையில், அ.தி.மு.க., கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளது. பல தொகுதிகளில், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வரும் தொடர் தோல்விகளால் தொண்டர்கள், நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

போஸ்டர்

லோக்சபா தேர்தல் முடிவு, அ.தி.மு.க.,வினரை விரக்தி அடைய செய்துள்ள நிலையில், சேலத்தில் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'சிந்திப்போம் செயல்படுவோம் சின்னம்மா தலைமை ஏற்போம்' என கூறி, 'செங்கோட்டு வேலவன் சேலம் மாநகர் மாவட்டம்' என குறிப்பிட்டு, அ.தி.மு.க., கொடி வண்ணத்தில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mahendran Puru
ஜூன் 05, 2024 20:14

நெருக்கடி கொடுப்பது யாரோ? இவராவது கட்சியின் தன்மானம் காக்க தைரியமாக கூட்டணியை விட்டு வெளியேறி வந்தார். தொடர்ந்திருந்தால் இன்று நாம் தமிழருக்கும் பின்னால் போயிருக்கும் கட்சி. பாஜக உறவாடிக் கெடுக்கும். அ.மலை இப்போது நாதகவை குறி வைக்கிறார். கவணம்.


yts
ஜூன் 05, 2024 19:34

ஏறி வந்த ஏணியை உதாசனப்படுத்திவிட்டு தன் இஷ்டத்துக்கு ஆடியதின் விளைவே இது


Sree
ஜூன் 05, 2024 19:19

என்ன செய்ய ஓ பி எஸ் என்ற ஒத்த மனிதர் செய்த கார்யம் அனைத்திற்கும் காரணம் ஆகி விட்டது


பேசும் தமிழன்
ஜூன் 05, 2024 18:48

பொதுக்குழுவை கூட்டி .. .பழனியை பதவியில் இருந்து நீக்கினால் தான் அதிமுக கட்சியை காப்ப்ற முடியும்.....இல்லையேல் அதோ கதி தான்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 15:55

எதிர்வரும் இடைதேர்தலில் நிற்க வேட்பாளர் கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்டதே.


J sundarrajan
ஜூன் 05, 2024 15:20

அதுக்கு காரணம், தான் பெரிய தலைவர்ன்னு அவரே முடிவு பண்ணிட்டாரு.


Vittopa Mk
ஜூன் 05, 2024 14:39

அடுத்த தேர்தலில் சின்ன அம்மா அல்லது ஒரு குரூப்ல ஒன்னு சேர்ந்து அனைவரும் பி ஜே பி, திரு எடப்பாடி, திரு பன்னீர், திரு தினகரன், பா மா கா, போட்டி இட்டால் ஒரு வாய்ப்பு உள்ளது.


K V Ramadoss
ஜூன் 05, 2024 20:53

இப்படிப்பட்ட கூட்டணி பி ஜே பி க்கு வேண்டாம்.


venugopal s
ஜூன் 05, 2024 12:08

அதிமுக தலைவர்கள் இபிஎஸ் ஓபிஎஸ் தினகரன் எல்லோரும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்தால் மட்டுமே பழைய அதிமுக ஆக முடியும். பாஜகவிடம் கட்சியை அடகு வைத்து விட்டு அவர்கள் பின்னால் போனதற்கு கிடைத்த பலமான அடியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை!


sri
ஜூன் 05, 2024 16:17

BJP கூட கூட்டணி இல்லை. திருநீறு கூட பூசாமல் சிறு பான்மையின வாக்குகளுக்காக நாடகமாடினார்.எடப்பாடிக்கு எம்ஜிஆர் என நினைப்பு. எளிமையான வழியில் முதல்வர் ஆனவர் .வழிநடத்த திறமை இல்லாத தலைவர்.


பேசும் தமிழன்
ஜூன் 05, 2024 18:51

வேணு அவர்களுக்கு திமுக கட்சியை விட ....அதிமுக கட்சி மேல் ரொம்ப அக்கறை போல் தெரிகிறது .....பார்த்து உபிஸ் களுக்கு கிடைக்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணியை கட் செய்து விட போகிறார்கள்.


sundaran manogaran
ஜூன் 05, 2024 11:01

காண்ட்ராக்டர்களையும் அவர்களுடைய கமிஷனுக்காக கட்சியிலிருக்கும் மாவட்ட செயலாளர்களையும் நம்பி தலைவரானால் வெற்றி பெறமுடியாது.பாவம் ஒன்றரை கோடி தொண்டர்கள் அவர்களை தேர்தலுக்கு மட்டும் கவனித்தால் இப்படித்தான்.மாதம்தோறும் ஏதாவது கொடுத்து சரிகட்ட வேண்டும்.அப்போதுதான் கம்பெனி நடத்தலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 05, 2024 10:58

அண்ணாமலையை சரிகட்டி கூட்டணியை அமைந்திருந்தால் 20 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அதிமுக வின் அழிவில்தான் பிஜெபி யின் வளர்ச்சி துவங்குகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை