மேலும் செய்திகள்
தமிழக நலனில் அக்கறை யாருக்கு?
27-Nov-2025 | 19
விழுப்புரம்: பாலியல் வழக்கில் சிக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, அ.தி.மு.க., சார்பில் விழுப்புரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் நடந்த அந்த போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த பேட்டி:
விழுப்புரம் அருகே, தி.மு.க., ஒன்றிய செயலரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை இதுவரை மருத்துவ பரிசோதனைக்குக்கூட அனுப்பவில்லை. பலாத்கார குற்றவாளிக்கு துணை போகிற அளவுக்கு ஸ்டாலின் அரசு தரம் தாழ்ந்து போய்விட்டதா? தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது கூட ஸ்டாலினுக்கு தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இந்த அரசு செயல்படவில்லை. இது, அதிகாரிகளால் நடத்தப்படும் அரசு. நான்கு அதிகாரிகளை வைத்துக் கொண்டு ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். இந்தியாவில் மட்டுமில்லாமல் எங்கும் நடக்காத வகையில், பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆளும் அரசே துணை போவது வெட்ககேடான செயல். இது, இந்த ஆட்சியின் ஆணவம், அகங்காரத்தை காட்டுகிறது. தி.மு.க., ஒன்றிய செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதி வழியில் போராட்டம் நடத்தும் அ.தி.மு.க.,வினரை காவல்துறையினர் கைது செய்கின்றனர். உண்மை நிலைமையை புரிந்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகம் கூறினார்.
27-Nov-2025 | 19