உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம்; பழனிசாமி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்

பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம்; பழனிசாமி மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை: 'தமிழக உரிமைகளை அடகு வைக்க மட்டும் தான் கூட்டணி என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நினைக்கிறாரா' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

நீர்நிலைகள் நிறைந்து, விவசாயிகள் கடும் உழைப்பை செலுத்தி, நெடுவயல் நிறையக்கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, காத்திருந்தோம். ஆனால், அதிக மழையால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, 'சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே, ஏன் அறுவடை செய்யவில்லை' என அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த பழனிசாமி. நெல்லின் ஈரப்பதத்தை, 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்; அவற்றை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட விவசாயிகள் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்க துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? போராடும் எங்களுக்கு துணை நிற்க, யாரிடம் அனுமதி பெற வேண்டும் என, பழனிசாமி காத்திருக்கிறார்? தமிழக மக்களின் சுயமரியாதையையும், தமிழக உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என, பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த பழனிசாமி, ஒருமுறையாவது தலையை சற்று நிமிர்த்தி, நம் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்கச் சொல்வாரா? விவசாயிகள் நலன் காக்க, தமிழகம் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான், இத்தனையும் கேட்கிறேன். ரத்தத்தை வியர்வையாக சிந்தி, விவசாயிகள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Rajasekar Jayaraman
நவ 25, 2025 13:38

நெல்லை பாதுகாக்க கூடோன் கட்டாமல் செம்மொழி பூங்க அமைக்கும் தேச துரோகி.


M Ramachandran
நவ 25, 2025 13:29

இங்கு வந்தாய் அரசியல் செய்கிறாய் அதனால் வேண்டாத பேச்சையெல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு இருக்க வேண்டும்.


V K
நவ 25, 2025 13:15

எப்படி எல்லாம் உருட்டுகிறார் ஆரம்பத்தில் நெல் மழையில் நனையவில்லை என்று சொன்னார் எதிர் கட்சி சொல்வது பொய் என்று சொன்னார் இப்போ நெல் ஈரப்பதம் உயர்த்த வேண்டும் மழையில் நனையாதற்கு எதற்கு உயர்த்த வேண்டும்


Anand
நவ 25, 2025 12:37

நா சொல்லலே, இவர் இப்படித்தான் தினமும் கண்ணாடி முன் நின்று அறிக்கை விடுகிறார் என்று.


சண்முகம்
நவ 25, 2025 11:44

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை மறந்து இவர் எந்த மயக்கத்தில் இருக்கிறார் தெரியவில்லை. இவர் எதை உளறி ஏமாற்றி அறிக்கை விட்டு சமாளிப்பு செய்கிறார் பாருங்கள் விவசாயிகளே. கேட்பதற்கு மக்கள் அனைவரும் திமுக கொத்தடிமை இல்லை. தமிழகத்தில் எங்கேயாவது டாஸ்மாக் சாராயம் சேமிப்பு கிடங்கு இல்லாமல் மழையில் நனணகின்றதா? இந்த விவசாயிகள் எவ்வளவு நஷ்டம் அடைந்தாலும் எப்போதும் நமக்கே வாக்களிப்பார்கள் என்ற தப்பு கணக்கு. இவர் அல்லது இவருடைய விவசாய மந்திரி மற்றும் துறை அதிகாரிகள் விவசாய பிரதிநிதிகள் மற்றும் எதிர் கட்சிகளுடன் நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்து உண்மையான தகவலை வெளியிட வேண்டும். இன்றைய நிலையிலிருந்து முன்னேற, மீண்டும் இந்த இழப்பு ஏற்பட்டால் தடுக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். தங்கள் ஆட்சியின் திறமையின் மையை மறைக்க எதிர்கட்சிகள் மீது பழி போட்டு தப்பிக்க நினைப்பது பொறுப்பற்ற செயல். உங்களால் முடியவில்லை என்றால் ஆட்சி பொருப்பில் இருந்து விலகுங்கள். 75 ஆண்டுகால திராவிட ஆட்சியில் ஊழல் வளர்ச்சி, டாஸ்மாக் வளர்ச்சி, சட்ட ஒழுங்கு சீர்கேடு வளர்ச்சி, போதைப் பொருள் வளர்ச்சி, திருட்டு வளர்ச்சி, கட்ட பஞ்சாயத்து வளர்ச்சி,.... வேறொன்றும் இல்லை. அனைத்தும் ஈர வெங்காயம்.


s vinayak
நவ 25, 2025 11:30

தொடரும் மஞ்ச துண்டின் துரோகம்


Haja Kuthubdeen
நவ 25, 2025 11:18

போதும் நாடகம் தலிவரே....இதை நம்ப மக்கள் தயாரா இல்ல...


RAMAKRISHNAN NATESAN
நவ 25, 2025 11:17

தலீவா ....... நாம என்னதான் இனிமே நாடகம் போட்டாலும், நம்மளையும், நம்ம பி சி டீம்களான நாம் டுமீளர், தமிழக சோதா கழகம் இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டாங்க தலீவா .....


Velan Iyengaar, Sydney
நவ 25, 2025 11:02

யாரங்கே வயல் வெளியில் கான்க்ரீட் போடு. தேர்தல் நேரம். ரோடு ஷோ வுக்கு ரெடி பண்ணு


R.MURALIKRISHNAN
நவ 25, 2025 10:46

ஒற்றுமையாக மக்கள் அனைவரும் குரல் கொடுக்கிறோம். இனிமேல் தமிழ்நாட்டிற்கு திமுகவே வேண்டாம்.


மேலும் செய்திகள்