உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைய தமிழகம் தயார்

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணைய தமிழகம் தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய அரசு நிதியுதவியை நிறுத்தியதால், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் இணைய தயார்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள நிதியுதவி நிலுவையை வழங்கும்படி, மத்திய கல்வி அமைச்சருக்கும், தமிழக தலைமை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.நாடு முழுதும் தரமான கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, மத்திய அரசு சார்பில், பி.எம்.ஸ்ரீ., என்ற பிரதம மந்திரியின் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் திட்டம், 2022ல் அமலானது.இணைந்தனஇந்த திட்டத்தில் சேர, ஒவ்வொரு மாநில அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி, மத்திய கல்வித்துறை வலியுறுத்தியது. அதனால், பெரும்பாலான மாநிலங்கள்ஒப்பந்தம் மேற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள்திட்டத்தில் இணைந்தன.நாடு முழுதும், 14,500 அரசு பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்து, நவீன கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளன. அவற்றுக்கு, மத்திய அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.ஆனால், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், டில்லி, கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மட்டும், அரசியல் காரணங்களால் இத்திட்டத்தில் இணையவில்லை. இதையடுத்து, இந்த மாநிலங்களுக்கான பள்ளிக்கல்வி நிதியுதவியை, மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது.அதாவது, மத்திய அரசின் சமக்ர சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் வரவேண்டிய, 1,138 கோடி ரூபாய், தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு வரவில்லை. அதிலும், நடப்பு நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிவதால்,தமிழக அரசுக்கு வரவேண்டிய நிதி இனி கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், நம் நாளிதழில், கடந்த 29ம் தேதி விரிவான செய்தி வெளியானது.இதைத்தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், செயலர் குமரகுருபரன், சமக்ர சிக் ஷா திட்ட மாநில இயக்குனர் ஆகியோர், மார்ச் 8ம் தேதி டில்லி சென்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, நிறுத்தப்பட்ட நிதியுதவியை வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.அப்போது, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் இணையாவிட்டால், நிதியுதவி கிடையாது என, மத்திய கல்வி அமைச்சர் உறுதியாக கூறி விட்டதாக தெரிகிறது.இதையடுத்து, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய பள்ளிக்கல்வி செயலர் சஞ்சய் குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கான, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வரிசையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள, தமிழக அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.இதற்காக, தமிழக பள்ளிக்கல்வி செயலர் தலைமையில், மாநில அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் முன், பி.எம்.ஸ்ரீ., திட்டம் தொடர்பாக, மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும். விரைவாக கொடுங்கஎனவே, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியுதவிக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது தவணைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டத்தில் சேராமல், இரண்டு ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த, தமிழக அரசு, தற்போது நிதியுதவி நிறுத்தப்பட்டதால், அந்த திட்டத்தில் இணைய சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அருண் பிரகாஷ் மதுரை
மார் 18, 2024 13:30

ஆமாம்..இன்னும் 3 மாதத்தில் இண்டி கூட்டணி ஆட்சினு சொல்றீங்க..அப்போ அதையே அழுத்தமாக சொல்லி எங்களுக்கு இந்த பள்ளி தேவை இல்லை..நிதியும் தேவை இல்லை,ஒன்றிய அரசின் அடக்குமுறை அப்படினு சொல்லி இருக்கலாமே..நீதான் தைரியமான ஆள் ஆச்சே..சொல்லு பார்ப்போம்...


செந்தமிழ் கார்த்திக்
மார் 18, 2024 11:38

பாஜக கட்சிக்கு அது புதுசு அல்ல.


enkeyem
மார் 18, 2024 15:29

புதிய கல்வித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என அறிவித்தது பி.எம்.ஸ்ரீ., திட்டம் தொடர்பாக, மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று அறிவித்தது மத்திய அரசா? உன்னுடைய கழக குடும்பக்கட்சிக்குத் தானே அந்தர் பல்டி அடிப்பது கை வந்த கலை?


Jay
மார் 18, 2024 11:32

மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்திவிட்டது என்று கூறி அரசியல் செய்யலாம் என்று காத்திருந்திருப்பார்கள். Bureaucrats கூறிய கட்டாயமான அறிவுரைகளை ஏற்று இதை நடைமுறைப்படுத்தி இருப்பார்கள். ஏற்கனவே நவயோதயா பள்ளிகளை தடுத்து நிறுத்தியதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வியை திமுக தடுத்து நிறுத்தி உள்ளது. இதையும் தடுத்து நிறுத்தினால் மக்களுக்கு வண்டவாளம் தெரிந்துவிடும் என்று அடக்கி வாசிக்கிறார்கள்.


duruvasar
மார் 18, 2024 10:13

ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வழிவகை செய்யும் எந்த திட்டமும் திராவிட மாடலுக்கு ஏற்புடையதே.


Vivekanandan Mahalingam
மார் 18, 2024 10:09

அப்பாடி . மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளது - அடுத்தது எல்லா தனியார் பள்ளிகளிலும் இலவச கல்வி முப்பது சதவீதம் அளிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும் - அப்போதுதான் தமிழ் நாடு உருப்படும்


Sampath Kumar
மார் 18, 2024 09:42

ippdi amputu maanilathaium மிரட்டி அடக்கி ஆட்சி செய்ய உங்களுக்கு எல்லாம் வெக்கமாக இல்லை என்ன செய்ய அதிகார திமிர் பிடித்த ஆணவ கும்பல் தானே நாட்டை ஆளுகின்றது அது அப்படித்தான் சேயும்


hari
மார் 18, 2024 18:04

உன் தலைமுறைகளை படிக்க வை


Duruvesan
மார் 18, 2024 09:27

பாஸ் வோட்டுக்கு பணம் குடுக்கணும்


vbs manian
மார் 18, 2024 09:15

பணம் வருகிறது என்றால் எப்போதும் எந்த விஷயத்திலும் சேர்ந்து கொள்வோம்.


Gopalan
மார் 18, 2024 08:56

better late than never. sensible move I think. give chance to everyone in Tamilnadu to learn whatever they want , language or science....land of opportunities next or equivalent to USA


சுந்தர்
மார் 18, 2024 08:38

ஏப்ரல் மாதம் முதல் சேர்ந்து கொண்டதால், அடுத்த நிதியாண்டு முதல் நிதி ஒதுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி