உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கல்வி உதவித்தொகை கிடைப்பதில் இழுபறி; மாணவிகள் ஆதங்கம்

கல்வி உதவித்தொகை கிடைப்பதில் இழுபறி; மாணவிகள் ஆதங்கம்

மதுரை : தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான கல்வித்தொகை வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.கல்வித்துறையில் 3 முதல் 8ம் வகுப்பு படிப்போரில் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டிற்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதன்படி 3 முதல் 5ம் வகுப்பில் ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1000, ஏழு, எட்டாம் வகுப்புக்கு ரூ.1500 வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் 2023 ற்கான உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 'எமிஸ்'ல் மாணவிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்யாததால் தான் இந்தாண்டு இழுபறி நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை கோரும் மாணவிகளின் விபரங்களை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஆகஸ்ட்டில் சமர்ப்பித்தால்ஜனவரியில் மாணவி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கடந்தஆண்டு மாணவிகளின்வங்கி எண்களை 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்து, வங்கி கணக்குடன் மாணவிகளின் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால்பல மாவட்டங்களில் இதுதொடர்பான பணிகள் முழுமை பெறவில்லை. அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ