உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி!

அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கோவை லோக்சபா தொகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்திருப்பது, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதை விட, கோவையை தங்கள் கோட்டை என கொண்டாடி வந்த அ.தி.மு.க.,வினருக்கு கிடைத்துள்ள தோல்வி, இந்த தேர்தல் பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது.கோவை லோக்சபா தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், சூலுார் மற்றும் பல்லடம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க., வசமும், கோவை தெற்கு தொகுதி, பா.ஜ.,வசமும் இருக்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடம் ஒரு தொகுதியும் கூட இல்லை.கோவைக்கு அந்தஸ்துகடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த மா.கம்யூ.,வேட்பாளரான நடராஜன்தான், வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் அவருக்கு 45 சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருந்தன. இதனால் கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான், கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக, நட்சத்திர அந்தஸ்துள்ள தொகுதியாக கோவை மாறியது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், கோவை தொகுதியின் முடிவை அறிவதற்கு, மாநில அளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பிரதமர் மோடி, இங்கு இரு முறை பிரசாரத்துக்கு வந்தது, இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.மொத்தமுள்ள, 21 லட்சத்து 6124 ஓட்டுக்களில், தபால் ஓட்டுக்கள் தவிர, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 13 லட்சத்து 66 ஆயிரத்து 597 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், கோவையில் அண்ணாமலைக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாகவே தெரிவித்தன. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளிலும் இதே நிலையே காணப்பட்டது.கோவை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களில் யாரைக் கேட்டாலும், அண்ணாமலைக்கு ஓட்டு போட்டதாகவும், அவருக்கே வெற்றி வாய்ப்பு என்றும் கூறி வந்தனர். இதனால், கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று எல்லாராலும் உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் தி.மு.க., கூட்டணிக் கட்சியினர், கட்சிகளின் ஓட்டு வங்கிக் கணக்கில் வெற்றி பெறுவோமென்று நம்பிக்கை தெரிவித்தனர்.அதற்கேற்ப, நேற்று காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே, தி.மு.க.,வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலை பெற்று வந்தார். சூலுார் தொகுதியில் மட்டும், சில சுற்றுக்களில் அண்ணாமலைக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன. ஆனால், பா.ஜ.,வசமுள்ள கோவை தெற்கு தொகுதியிலும், அக்கட்சிக்கு பலமுள்ள தொகுதியாகக் கருதப்படும் கவுண்டம்பாளையத்திலும், தி.மு.க..வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்தன.

கூட்டணியால் வெற்றி

ஊரகத் தொகுதிகளான சூலுார் மற்றும் பல்லடம் தொகுதிகளிலும், சிங்காநல்லுார் தொகுதியிலும் கூட, பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்த நிலையில், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் தி.மு.க.,வுக்குக் கிடைத்த அதிக ஓட்டுக்களால், அண்ணாமலையை விட ராஜ்குமார் அதிக முன்னிலை பெற முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.இறுதியில், தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், வெற்றி பெற்றார்; பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலை, தோல்வியடைந்தார்.தமிழகம் முழுவதும் தி.மு.க.,கூட்டணிக்கட்சிகளின் ஓட்டு வங்கியால் கிடைத்த வெற்றி, கோவையிலும் எதிரொலித்துள்ளது. அண்ணாமலைக்கு இருந்த செல்வாக்கு, பிரதமர் மோடியின் பிரசாரம் ஆகியவற்றின் காரணமாக, பா.ஜ.,வுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. அண்ணாமலையின் தோல்வி, தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்துறை ஏமாற்றம்

அ.தி.மு.க., ஓட்டு வங்கி, பெரும் சரிவைச் சந்தித்திருப்பது இத்தேர்தலில் உறுதியாகியுள்ளது. அ.தி.மு.க., கோட்டையாகக் கருதப்படும் கோவையில், அக்கட்சிக்கு பலத்த அடி கிடைத்திருப்பது, அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.மத்தியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையவிருக்கும் சூழலில், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.அதனால் கோவைக்கு பல திட்டங்கள் கிடைக்கும் என்று, தொழில் அமைப்பினர் நம்பிக்கையுடன் இருந்தனர். அண்ணாமலையின் தோல்வி, அவர்கள் அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

காரணங்கள்!

தமிழகம் முழுவதும் தி.மு.க., கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி தான், கோவை தொகுதியிலும் எதிரொலித்து இருக்கிறது. கடந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த அதே கட்சிகள், இந்தத் தேர்தலிலும் மாறாமல் இருந்ததால், கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஓட்டுக்கள் பெரியளவில் சிதறவில்லை. அதே நேரத்தில், சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் தி.மு.க.,வுக்குக் கிடைத்துள்ளன.இதற்கு முந்தைய தேர்தல்களில், அ.தி.மு.க.,வுக்குச் சென்ற சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களும், இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு திசை மாறின. பா.ஜ.,வசமுள்ள கோவை தெற்கு தொகுதியில், கணிசமாகவுள்ள இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்கள், தி.மு.க.,வேட்பாளர் ராஜ்குமாருக்கு அப்படியே கிடைத்ததும், அவருடைய வெற்றிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருந்துள்ளன.வளர்ச்சியை விரும்பிய பல்வேறு கட்சியினரும், கோவையில் அண்ணாமலை வென்றால், பல திட்டங்கள் வரும் என்ற நம்பிக்கையில் அண்ணாமலைக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் கொள்கைரீதியாக பா.ஜ.,வை எதிர்க்கும் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் உள்ளிட்ட பலரும், அவருக்கு எதிராக ஓட்டுப் போட்டு இருப்பது, தி.மு.க.,வின் பிரமாண்ட வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

R SRINIVASAN
ஜூன் 08, 2024 09:29

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கையும் கஞ்சாவையும் எதிர்த்து போராட சொன்னால் வரமாட்டார்கள்.ஆனால் நல்லவர்களை தோற்கடிக்க சொன்னால் அதை கச்சிதமாக செய்து முடிப்பார்கள் . தமிழ்நாட்டில் பிளஸ்2 மாணவர்களில் நிறையபேர் தமிழ் பரீச்சைக்கு வரவே இல்லயாம் .56 இன்ஜினியரிங் கல்லூரிகளில் வெறும் 20% பேர்தான் பாஸ் பண்ணியிருக்கியர்களாம் . இங்கு கட்சியையும் ஜாதி மதத்தையும் பேசும் அன்பர்கள் கல்வியின் தரத்தையும் சுகாதார சீர்கேட்டையும் சாலைகள் மோசமாக இருப்பதை பத்ரியும் ஓவ்வரு பதிப்பிலும் விடாமல் எழுதுங்கள் ஒரு அண்ணாமலை தோற்றால் அவருக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த நஷ்டமுமில்லை .மேலும் GST என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரியாவையுங்கள்


Neutrallite
ஜூன் 06, 2024 16:26

தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர், தான் தோற்றால் பரவாயில்லை தன்னை விட ஒருவன் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாதென்று அதிமுகவினரையே திமுகவிற்கு வாக்களிக்க சொல்லி எட்டப்பன் வேலை செய்துள்ளது. ஆகையால் இரண்டு கட்சி ஆட்களும் ஒன்றிணைந்து தோற்கடிக்க முயன்றது தான் காரணம். கேரளாவில் இது போல அவ்வப்போது நடக்கும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 06, 2024 13:15

இந்தாளு அரசியலில் வெற்றி பெறணும்னா... மொதல்ல “தன்னோட வாய” கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளணும்... இவர் ஒருத்தர்தான் அறிவாளி, படிச்சவர், மேதாவி...ங்ற தலைக்கணத்தால் பேசிய பேச்சுக்கள் மட்டுமே இவரது தோல்விக்குக் காரணம். மொதல்ல... மீடியா, பிரஸ்..காரங்களை பகைச்சிட்டது மாபெரும் முட்டாள்தனம். கழுதைய குதிரையாக்குவதும், பூனையை யானை ஆக்குவதும் பத்திரிக்கைத் துறை... இதை அறிந்து வைத்திருந்த ஜெயலலிதா, கலைஞர் போன்ற அரசியல் ஜாம்பவான்களே... தன் நாவை அடக்கி வைத்து பேசுவார்கள்... பத்திரிகைகாரங்களை எப்போதும் பகைச்சிக்க மாட்டாங்க... ஆனா... இவருக்கு ஓவர் வாய்...


rameshkumar natarajan
ஜூன் 06, 2024 11:55

I am wondering how he got back deposit?


V Manimaran
ஜூன் 06, 2024 10:15

நீங்களும் கால தரையில வையுங்க. அப்பத்தான் ஊரு உலகத்துல என்ன நடக்குதுன்னு மண்டைக்கு உரைக்கும். கற்பனை உலகத்துல வாழுறதுல உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சி. அதிர்வாம்... அதிர்வு.


Justin Jose
ஜூன் 06, 2024 09:11

டேய் மண்ணாங்கட்டிகளா... மதம் எனும் தீவிரவாதத்தை தூக்கி குப்பையில் போட்டு நல்ல மனுஷனா மக்களிடம் வாங்க. இல்லையேல் தமிழ்நாட்டு மக்கள் உன்னை நிரந்தர பிரியாணி போட்டு விடுவார்கள்.


Neutrallite
ஜூன் 06, 2024 09:58

சொல்லுறது யாரு பாரு...


ராஜேஷ்
ஜூன் 06, 2024 04:36

கண்ண தாசன் எழுதிய பொய்யிலே பிறந்த மனிதர்கள் வாய்ப்பு இல்லை இராஜா


Kalaiselvan Periasamy
ஜூன் 06, 2024 04:33

தமிழ் நாட்டு மாக்கள் எப்போதுமே அநீதிக்கு தான் ஆதரவு தருவார்கள் என்பதையே இது காட்டுகிறது. டிராவிடனின் காலி தமிழ் இனம் அடிமையாக உள்ளது என்பதே உண்மை . மண்ணாகி கெட்ட தமிழர்கள் .


vaiko
ஜூன் 06, 2024 00:43

அண்ணாமலையின் தோல்வி செய்தியை கேட்டு அமெரிக்கா அதிபர் ஜோ பைடேன் மிகவும் அதிர்ச்சி அடைந்து நேற்று முழுவதும் சாப்பிடவில்லையாம். ட்ரும்பிற்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாம்.


Neutrallite
ஜூன் 06, 2024 10:00

அட நீங்க வேற....pappu ஜெயிச்சத கேட்டு அவுங்க அம்மாவுக்கே அதிர்ச்சி தாங்கலயாம் ...


Vijay D Ratnam
ஜூன் 05, 2024 22:59

அண்ணாமலை தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான். வெற்றி பெற்று இருந்தால்தான் ஆச்சர்யம். கிரவுண்ட் ரியாலிட்டி புரியாத அண்ணாமலை ரசிகர்மன்ற சேனல்கள், பத்திரிகைகள், யூ-ட்யூபர்கள், பஜனை கோஷ்டிகள் வேண்டுமானால் அதிர்ச்சி அடைந்து இருக்கலாம். சாதாரண மக்களுக்கு தெரிகிறது. திமுகவை மக்கள் காறித்துப்புனாலும் அவர்கள் வெற்றி பெறுவதையும் பார்க்கவேண்டும். திமுக என்ன நடந்தாலும் கூட்டணியை உடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இதே திமுக கூட்டணி நிச்சயம் ஜெயிக்கும். அதிமுக பாஜக பாமக தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் எல்லோரும் ஓரணியில் நின்றால் தவிர திமுக கூட்டணி வெல்வதை யாராலும் தவிர்க்க முடியாது. அதிமுகவும் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இந்த பாராளுமன்ற ரிசல்ட்டை பூத் வாரியாக செக் பண்ணிப்பாருங்கள், தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களால் பாதிரியார்களால் உத்தரவிடப்பட்டு இஸ்லாமியர்கள் கிருஸ்தவர்கள் க்ரிப்டோ கிருஸ்தவர்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு போகிறது. அதில் ரெண்டு சதவிகிதம் கூட அதிமுகவுக்கு விழவில்லை என்பது புரியும். இதை தவிர திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒரு பக்கம் சென்றுவிடாமல் சிதைப்பதற்கு சபரீசன் ஃபைனான்சில் நடத்தப்படும் நாம் தமிழர் கட்சி இருக்கிறது.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை