உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் ஜெயிக்கப்போவது யாரு... ஊரு முழுக்க பெட்டிங் ஜோரு!

கோவையில் ஜெயிக்கப்போவது யாரு... ஊரு முழுக்க பெட்டிங் ஜோரு!

ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை சூப்பராக சூது கவ்வுது!

இந்தியாவில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது எந்தக் கட்சி, யார் பிரதமர் என்று உலகமே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது; தமிழகத்தில் அதிகம் வெல்லப்போவது எந்தக் கூட்டணி என்பதைத் தெரிந்து கொள்ள தேசமே ஆவலோடு இருக்கிறது; ஆனால் கோவையில் ஜெயிக்கப்போவது யார் என்று தமிழகமே தவிப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.இன்னும் தெளிவாகச் சொல்வதானால், அண்ணா மலை ஜெயிப்பாரா, மாட்டாரா என்பதே, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் எதிரொலிக்கும் கேள்வியாகவுள்ளது. தி.மு.க., அரசைக் கடுமையாகச் சாடி வரும் அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்பது, தி.மு.க., தலைமையின் தீவிரமான விருப்பமாகவுள்ளது. அதனால் கோவையில் வெல்வதற்கு கோடிகளை அள்ளி இறைக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, மோடியின் பிரசாரம், அண்ணாமலையின் தனிப்பட்ட செல்வாக்கு, அவருக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது.இப்போது வரை இத் தொகுதி மக்களின் மனநிலையை, தேர்தல் முடிவை துல்லியமாகக் கணிப்பது கடினமாகவுள்ளது. இதை வைத்தே, இப்போது 'பெட்டிங்' களை கட்டத் துவங்கியுள்ளது. சாதாரண தொழிலாளர்கள் முதல், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், ஐ.டி., ஊழியர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும், ஆயிரம் முதல் லட்சங்கள் வரை, 'பெட்' கட்டத் துவங்கியுள்ளனர். அதிலும் 'அண்ணாமலை வெற்றி பெறுவார்' என்று பெரும் தொகையைக் பந்தயம் கட்டுவோரே அதிகம் உள்ளதாகவும், பல கோடிக்கு 'பெட்டிங்' நடப்பதாகவும் உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.பொதுவாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அரசியல்ரீதியாக தங்கள் முடிவையே மக்கள் வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில், ஓட்டுக்கு 500, 1,000 என்று பணப்பட்டுவாடா ஏற்படுத்தும் மாற்றத்தை யாராலும் கணிக்க இயலாது. இந்த மாற்றம், எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை கோடிகளை இழக்க வைக்கப் போகிறது என்பது ஜூன் 4ல் தான் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Azar Mufeen
ஏப் 19, 2024 00:01

கோவையில் போட்டி தி. மு. கவா அ. தி. மு. காவா மட்டுமல்ல நாம் தமிழர் கட்சியும் தான் உண்மை நிலைமை என்னவென்று மலருக்கு நன்றாக தெரிந்தும் எப்படியெல்லாம் பில்டப் கொடுக்குது இந்த முறை இளைஞ்சர்களின் ஆதரவு அண்ணன் சீமான் அவர்களுக்கு


Aswin
ஏப் 18, 2024 22:15

நாளைக்கு வெறும் ஓட்டு போடுற நாள் இல்லை, அடுத்த வருஷத்துக்கு நீ இதை சாப்பிடாதே, இதை உடுத்தாதே, கேள்வி கேட்காத, உன் ஜாதி என்ன, மதம் என்ன, அதுக்கு வரி, இதுக்கு வரின்னு நம்ம தலைமேல உக்காந்து ஆர்டர் போடப்போற ஆள தேர்ந்தெடுக்கணுமா, இல்ல கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி, சமூகநீதி, வளர்ச்சின்னு கொண்டுபோற ஆள தேர்ந்தெடுக்கப்போறோமா ங்குற நாள் ஆகவே மக்களே


வினோத்
ஏப் 18, 2024 21:38

அநாகரீகமாக பேச கூடியவர்... அண்ணாமலை. இவர் நமக்கு தேவை இல்லை. கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார்


பேசும் தமிழன்
ஏப் 18, 2024 20:16

அண்ணாமலை அவர்கள்..... புள்ளி விவரங்களுடன்.... சொல்லி அடிக்கிறார்.... கில்லியாக இருக்கிறார்.... அண்ணாமலைப் அவர்களின் வெற்றி.... தமிழர்களின் வெற்றி.


venugopal s
ஏப் 18, 2024 17:33

கோவை மக்களே!


குமரன்
ஏப் 18, 2024 16:44

அண்ணாமலை வெற்றி பெற வேண்டும்


ram
ஏப் 18, 2024 15:58

கோவையில் இந்த முறை அண்ணாமலை ஜெயிக்கவில்லையென்றால்... கோயமுத்தூர் தொகுதி மக்கள் எல்லோரும் நடுத்தெருவில் நிற்பது உறுதி.. இனியும் இந்த பணம் வாங்கி ஒன்றுக்கும் உதவாததுங்களை உக்காரவச்சு அவங்க ஊருக்கு செய்யிறாங்களோ இல்லையோ.. அவங்களுக்கு நல்லா சேர்த்துக்கிறாங்க... மக்களே இனியாவது திருந்துங்க...


T.varathu
ஏப் 18, 2024 15:53

அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு, அவரால் எந்த பாதிப்பும் ஏற்படாது, திராவிடம் வெல்லும் ௧௦௦% அண்ணாமலை தோற்பது உறுதி


பேசும் தமிழன்
ஏப் 18, 2024 20:14

திராவிடம் தான் ஏற்கெனவே.... 50 ஆண்டுகள் கிழித்த கிழிப்பை பார்த்தோமே.... இனி நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்


S. Arulmozhi
ஏப் 18, 2024 15:40

தரந்தாழ்ந்த அரசியல்வாதி வைப்பு தொகை கிடைக்க கூடாது


Yaro Oruvan
ஏப் 18, 2024 15:33

அதிமுக விசுவாசிகளுக்கு: இந்த முறை நீங்கள் இரட்டை இலைக்கு போட்டால் நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் திமுகவிற்கு சாதகமாக போகும் திமுகவை ஒழிக்க நினைத்த புரட்சித்தலைவர் மற்றும் அம்மா அவர்களின் எண்ணம் ஈடேற தீய சக்தி திமுக வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷ செடி சிந்தித்து செயல்படுங்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை