உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கர்நாடகாவை போல தமிழகத்திலும் ஜன., 22ல் சிறப்பு பூஜை நடக்குமா?

கர்நாடகாவை போல தமிழகத்திலும் ஜன., 22ல் சிறப்பு பூஜை நடக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : அயோத்தியில், ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும் நாளன்று, கர்நாடக ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல, தமிழகத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுமா என, பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. வரும் 22ம் தேதி, உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு:

அயோத்தி ராமர் கோவிலில், ஜனவரி 22ல் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 12 மணி 29 நிமிடம் எட்டு நொடியில் இருந்து, 12:32 மணி வரை கோவில் திறப்பு விழா நடக்கிறது.சரியாக, இதே நேரத்தில், கர்நாடக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், மஹா மங்கள ஆரத்தி நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ராமர் கோவில் திறப்பு நாளன்று, காங்., ஆட்சி நடக்கும் கர்நாடகாவில், சிறப்பு பூஜைகளுக்கு மாநில அமைச்சரே உத்தரவிட்டுள்ளார். இதேபோல, 'தமிழகத்திலும் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

கனோஜ் ஆங்ரே
ஜன 08, 2024 19:32

இந்து மத வேதங்கள், உபநிடத சாஸ்திரப்படி... ஆறு கால நித்திய பூஜையில் ஒன்றான உச்சிக்கால பூஜை நண்பகல் 12 மணிக்கு நடத்தப்படுகிறது. விநாயகர் பூசை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான இலிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்தப் பூசைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேசரிடம் வைத்து வழிபட்ட பிறகு... கோவில் நடை சாத்த வேண்டும். மாலை கோவில் நடை திறந்த பின்னர், சாயரட்சை பூசையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.... அப்படீன்னு நான் சொல்லல சாமியோவ்... இந்துமத வேதகாமத்தில் சொல்லப்பட்டது. ஆனால், அயோத்தி ராமர் கோவில் 12:32 மணி வரை கோவில் திறப்பு விழா நடக்கிறது.. ராமர் கோவில் திறப்புக்கு வேதமோ, உபநிடதமோ, வேதகாமமோ இல்லையோ...? பெரியவாள்களெல்லாம் சொல்லணும்.


Selvakumar Krishna
ஜன 08, 2024 19:05

ராமர் கோயிலில் மட்டும் நடக்கட்டும், அணைத்து கோயில்களிலும் தேவையில்லாத வேலை. மசூதியை எடுத்த ஆட்களே போக முடியவில்லை (LKA, MM J).


Ramasamy
ஜன 08, 2024 15:17

துர்கா பூஜை மட்டும் உண்டு . ராமர் சிலைக்கு பதில் ஹிந்து அல்லாத சிலை இருந்தால் பூஜை உண்டு அயோத்தி மசூதி இடத்தில் ஏதும் நடந்தால் இங்கு உண்டு. ஆனாலும் தமிழ் ஹிந்து மனம் இழந்து அவர்களுக்குத்தான் வோட்டை போடுவார்கள். ஓட்டும் போட்டுவிட்டு புலமும்பவதும் அவர்கள்தான்


duruvasar
ஜன 08, 2024 15:05

இது வெங்காய மண் இங்கெல்லாம் அது நடக்காது. அதுபோக ருதராஷ பூனை எங்கே வேட்டையாடிக்கொண்டிருக்குமோ ?


Mohan
ஜன 08, 2024 13:28

அயோத்தியா இனிமேல் உலகறிய செய்கிறது ஒரு கட்சி அதுவே தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு கோவிலையும் உலகறிய செய்து பல கலைகள், ஆன்மீகம் வளரும் , சுற்றுலா மேம்படும் வெளிநாட்டு அந்நிய செலாவணி உயரும்,நம் கலாச்சாரம் உலகெங்கும் பரவும் ,பலப்பல குடும்பங்கள் வாழ்வு செழிக்கும் , இது நடந்தால் இயற்க்கை கூட நம்பக்கம் இருக்கும், பேரழிவு வராது அதை இம்மக்கள் செய்வார்களா சந்தேகமே ...


தமிழ்வேள்
ஜன 08, 2024 13:17

திருட்டு திராவிஷ சமாதிகளில் வெங்காயம் மற்றும் தயிர்வடை வைக்கப்படும் ....


chennai sivakumar
ஜன 08, 2024 12:54

பகல் கனவு


S.V.Srinivasan
ஜன 08, 2024 12:29

இங்குள்ள நாத்திக திராவிட மாடல் ஹிந்துக்கள் பண்டிகைக்கே வாழ்த்து சொன்னால் எங்கே சிறுபான்மையினர் வாக்கு வாங்கி புட்டுக்குமோ என்று சித்தினை செய்யும் கூட்டம். இவரைகளிடம் ராமர் கோவில் அன்று பூஜை செய்வதை எதிர்பார்ப்பது வேஸ்ட்.


lana
ஜன 08, 2024 12:18

கோவில் இறைவன் க்கு சொந்தம். அர நிலைய துறை ஒரு மேற்பார்வையாளர் மட்டுமே. ஆனால் இங்கு ஒண்ட வந்த ஒட்டகம் உரிமை உள்ளவர்கள் ஐ துரத்தி விட்டது


rasaa
ஜன 08, 2024 12:09

நிச்சயம் நடக்காது. ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தி யாருமே எந்த கோவிலுக்கும் செல்லமுடியாத நிலை உருவாக்கப்படும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை