புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலையொட்டி, என்.ஆர்.காங்., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை:அகில இந்திய என்.ஆர். காங்., தலைவரும், முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்னர்.அதன்படி மண்ணாடிப்பட்டு முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம், திருபுவனை முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, ஊசுடு வைத்தியநாதன், அமைச்சர் ஜெயக்குமார், வில்லியனுார் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், உழவர்கரை முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், கதிர்காமம் ரமேஷ் எம்.எல்.ஏ., இந்திரா நகர் அரசு கொறடா ஆறுமுகம்.தட்டாஞ்சாவடி முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த், காமராஜர் நகர் புவனேஸ்வரன், லாஸ்பேட் நந்தா ஸ்ரீதர், காலப்பட்டு விஸ்வநாதன், முத்தியால்பேட்டை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ராஜ்பவன் அமைச்சர் லட்சுமிநாராயணன், உப்பளம் பாஸ்கர், உருளையான்பேட்டை சேகர்.நெல்லித்தோப்பு சிவகந்தன், முதலியார்பேட் டை வீரபத்திரன், அரியாங்குப்பம் பாஸ்கர் எம்.எல்.ஏ., மணவெளி மனோகரன், ஏம்பலம் லட்சுமிகந்தன் எம்.எல்.ஏ., நெட்டப்பாக்கம் துணை சபாநாயகர் ராஜவேலு, பாகூர் முன்னாள் அமைச்சர் தியாகராஜன், நெடுங்காடு சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., காரைக்கால் வடக்கு அமைச்சர் திருமுருகன், காரைக்கால் தெற்கு சுந்தர்ராஜன், டி.ஆர்.பட்டினம் ஜெயராமன், மாகே ரஹ்மான், ஏனாம் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.