உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி நரசிம்மர் கோவிலில் 22 ம் தேதி தேரோட்டம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் 22 ம் தேதி தேரோட்டம்

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நாளை மறுநாள் தேரோட்டம் நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 18ம் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, நாளை வெண்ணைத்தாழி திருக்கோலத்துடன் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் 22ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து, 25ம் தேதி ஊஞ்சல் உற்வசம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை