உள்ளூர் செய்திகள்

108 பால்குட அபிஷேகம்

பாகூர் : பாகூரில் பழமை வாய்ந்த பூலோக மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிேஷகம் நடந்தது. இதையொட்டி, பக்தர்கள் நேற்று காலை 9:00 மணியளவில் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்து மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். 10:00 மணிக்கு உலக நண்மை வேண்டிய பூலோகம் மாரியம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை