உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பேரிடம் ரூ.1.73 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

2 பேரிடம் ரூ.1.73 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில், 2 பேரிடம், 1.73 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, கதிர்காமம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவரை கடந்த சில தினங்களுக்கு முன், மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம், அதிகம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பிய பாக்கியலட்சுமி, 1.28 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.அதேபோல், பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் 'பிளிப்கார்ட்'டில் டி-ஷர்ட் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். சிறிது நேரத்தில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, அவர் அனுப்ப சொன்ன, டி-ஷர்ட்டிற்கு குலுக்கல் முறையில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள, கார் பரிசாக கிடைத்ததாக தெரிவித்தார்.காரை பரிசாக பெற, முன் பணமாக, 45 ஆயிரம் அனுப்புமாறு கூறினார். அதை நம்பி சக்திவேல் 45 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை