உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 23 மீனவர்களுக்கு  நலத்திட்ட உதவி

23 மீனவர்களுக்கு  நலத்திட்ட உதவி

புதுச்சேரி: புதுச்சேரியில், 23 மீனவர்களுக்கு, 50 சதவீத மானியத்தில், இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் வலைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சிறு மீன்பிடி தொழில் மீனவர்களுக்கான, மானிய உதவி வழங்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2023-24ம் ஆண்டிற்கான, 23 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் நபர் ஒருவருக்கு, ரூ.16,500 வீதம், மொத்தம் ரூ.3,79,500 மானியமாக இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் வலைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ